/   புகார் பெட்டி    /  செங்கல்பட்டு  /   செங்கல்பட்டு: புகார் பெட்டி; சாலையில் மண் குவியல் வாகன ஓட்டிகள் திணறல்                      
செங்கல்பட்டு: புகார் பெட்டி; சாலையில் மண் குவியல் வாகன ஓட்டிகள் திணறல்
திருப்போரூர் -- செங்கல்பட்டு சாலையில், தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில் உள்ள மையத் தடுப்பு பகுதியில், அதிக அளவில் மண் குவிந்துள்ளது. குறிப்பாக வெங்கூர், கரும்பாக்கம், வளர்குன்றம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில், அதிகமாக மண் குவிந்துள்ளது. இதனால், வாகனங்கள் செல்லும் போது மண் காற்றில் பறப்பதால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். சாலையின் மையப்பகுதியில் குவிந்துள்ள மண்ணை அகற்ற வேண்டும்.- வி.மகாலிங்கம்,கரும்பாக்கம்.