நந்திவரம் மருத்துவமனை பூங்கா
சீரமைக்க வேண்டுகோள்
நந்திவரம் - -கூடுவாஞ்சேரி நகராட்சி, ஜி.எஸ்.டி., சாலையில் நந்திவரம் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை வளாகத்தில் சிறுவர் பூங்கா உள்ளது.இதில், சிறுவர்கள் விளையாடுவதற்கான விளையாட்டு உபகரணங்களும், பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கு, நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது.தற்போது, பூங்கா உரிய பராமரிப்பு இன்றி, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்த முடியாதபடி உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் பூங்காவை சீரமைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.-எஸ்.திலகவதி, நந்திவரம்.சாலையோர பள்ளத்தால்
அரியனுாரில் ஆபத்து
செய்யூர் அடுத்த அரியனுார் கிராமத்தில், ஓணம்பாக்கம் - விழுதமங்கலம் செல்லும் தார்சாலை உள்ளது. இந்த சாலையில், தினசரி ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன.கடந்த பருவ மழையின் போது, சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து, மண் அரிப்பு ஏற்பட்டு, சாலை ஓரத்தில் பள்ளம் ஏற்பட்டது.சாலை ஓரத்தில் ஏற்பட்டுள்ள பள்ளம், தற்போது வரை மண் கொட்டி சீரமைக்கப்படாமல் உள்ளதால், இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள், சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலை ஓரத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சி.சுப்ரமணி, செய்யூர்.குண்டும் குழியுமான சாலை
திருக்கச்சூரில் அவஸ்தை
பனங்கொட்டூர் -- திருக்கச்சூர் சாலையில், திருக்கச்சூர் பகுதி வளைவில், சாலையில் அடுத்தடுத்து குண்டும் குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். இரவில் செல்வோர், தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். சாலையில் உள்ள இந்த பள்ளத்தை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எம்.ஞானமூர்த்தி, மறைமலை நகர்.திருப்போரூர் அடுத்த பூண்டியில்
அடிக்கடி மின் இணைப்பு 'கட்'
திருப்போரூர் அடுத்த பூண்டி கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு, மும்முனை இணைப்பு அடிக்கடி மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது.சில நேரங்களில், குறைந்த மற்றும் உயர் மின்னழுத்தம் என, மாறி மாறி வருவதால், வீட்டு உபயோக பொருட்கள் பழுதாகின்றன. எனவே, சீரான மின்சாரம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எம்.விஜயன், பூண்டி.உடைந்து விழுந்த மின்கம்பம்
ஆலப்பாக்கத்தில் அதிர்ச்சி
செங்கல்பட்டு அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சியில், பிள்ளையார் கோவில் தெருவில், 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இங்குள்ள பிரதான சாலையில், மின் வாரியத்திற்கு சொந்தமான மின் கம்பம் உடைந்து, ஒருவர் வீட்டின் மீது விழுந்துள்ளது.அதனால், இவ்வழியாக பள்ளி, கல்லுாரிக்கு சென்ற மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் சென்று வருகின்றனர். உடைந்த மின் கம்பத்தை அகற்றக்கோரி, பல மனுக்கள் அளிக்கப்பட்டு உள்ளன. ஆனாலும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதனால், விபத்து ஏற்படுவதற்குள், மின் கம்பத்தை மாற்ற வேண்டும்.- எஸ்.சண்முகம்,ஆலப்பாக்கம்.