உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்.: புகார் பெட்டி; சாலையில் திரியும் மாடுகளால் இடையூறு

காஞ்சிபுரம்.: புகார் பெட்டி; சாலையில் திரியும் மாடுகளால் இடையூறு

சாலையில் திரியும் மாடுகளால் இடையூறு

சின்ன மதுரப்பாக்கம் கிராமத்தில் இருந்து, தொள்ளாழி வழியாக, உள்ளாவூர் செல்லும் சாலை உள்ளது. இச்சாலை வழியாக, கிராம மக்கள் தங்களின் தேவைக்கு செங்கல்பட்டு பகுதிக்கு சென்று வருகின்றனர்.அதேபோல், உள்ளாவூர், தோணாங்குளம், தொள்ளாழி, கொசப்பட்டு ஆகிய கிராம மக்கள் சின்ன மதுரப்பாக்கம் கிராமம் வழியாக ஒரகடம் சென்று வருகின்றனர். இதில், சின்னமதுரப்பாக்கம் கிராமத்தில் மாடுகள் வாகன ஓட்டிகளை வழிமறித்து நிற்கின்றன. குறிப்பாக, சின்னமதுரப்பாக்கம் சுடுகாடு வளைவில் மாடுகள் படுத்து ஓய்வு எடுக்கின்றன. அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், ஒலி எழுப்பியும் சாலையை விட்டு மாடுகள் இறங்க மறுக்கின்றன.இதனால், தார் சாலையை விட்டு இறங்கி ஒத்தையடிப்பாதையில் இரு சக்கர வாகனங்களை ஓட்டி செல்ல வேண்டி உள்ளது. கார் செல்லும் போது மாடுகளை விரட்டி விட்ட பின் செல்ல வேண்டி உள்ளது. சம்மந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- நா.அசோக், காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை