/ புகார் பெட்டி / திருவள்ளூர் / புகார் பெட்டி: மின்மாற்றியில் படர்ந்துள்ள செடி, கொடிகள் அகற்றப்படுமா?
புகார் பெட்டி: மின்மாற்றியில் படர்ந்துள்ள செடி, கொடிகள் அகற்றப்படுமா?
திருவாலங்காடு ---- பேரம்பாக்கம் மாநில நெடுஞ்சாலையில், மணவூர் அடுத்து உள்ளது அண்ணா நகர். இங்கு, சாலை வளைவில் உள்ள மின்மாற்றி வாயிலாக 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.தற்போது, மின்மாற்றியில் செடி, கொடிகள் படர்ந்து கம்பியை சூழ்ந்துள்ளன. இதனால், இரவு நேரங்களில், காற்று வீசினால் மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, மின்மாற்றியை சூழ்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி சீரமைக்க மின்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- வி.பிரபாகரன், மணவூர்.