உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூர்: புகார் பெட்டி; மழையில் வழிந்தோடும் நீர்த்தேக்க பாதை

திருவள்ளூர்: புகார் பெட்டி; மழையில் வழிந்தோடும் நீர்த்தேக்க பாதை

மழையில் வழிந்தோடும் நீர்த்தேக்க பாதை

சென்னைக்கு கூடுதல் குடிநீர் வழங்கும் திட்டத்திற்காக, கும்மிடிப்பூண்டி அருகே, கண்ணன்கோட்டை மற்றும் தேர்வாய் கண்டிகை ஏரிகளை இணைத்து, 1,100 ஏக்கர் பரப்பளவில் நீர்த்தேக்கம் ஏற்படுத்தப்பட்டது. இந்த நீர்த்தேக்கத்தில் உள்ள கண்காணிப்பு டவருக்கு செல்ல செம்மண் பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையில், வழிந்தோடும் மழைநீருடன் செம்மண் பாதையும் சரிந்து ஓடுகிறது.அடுத்தடுத்து வரும் மழைக்காலங்களில் பாதை முழுதும் மழைநீரில் அடித்து செல்ல வாய்ப்புள்ளது. எனவே, நீர்வளத்துறையினர்துரிதமாக செயல்பட்டு, அந்த பாதையை வலுப்படுத்தநடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்