உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / யானை தாக்கி காளை மாடு உயிரிழப்பு

யானை தாக்கி காளை மாடு உயிரிழப்பு

சத்தியமங்கலம், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து, யானைகள் வெளியேறி ஊருக்குள் புகுவது வாடிக்கையாகி உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, திண்ணையூரை சேர்ந்த விவசாயி பெருமாள் தன் வீட்டின் முன் மாடுகளை கட்டி இருந்தார்.வனப்பகுதியில் இருந்து நள்ளிரவில் வெளியேறிய ஒற்றை யானை, அங்கு கட்டியிருந்த காளை மாட்டை தாக்கியதில் அது இறந்தது. சம்பவ இடத்திற்கு, நேற்று காலை சென்று வனத்துறையினர் விசாரணை நடத்தினர். இறந்த காளை மாட்டிற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என, மலை கிராம மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி