| ADDED : ஜூலை 09, 2024 12:17 AM
ஆவடி மாநகராட்சியில், கோவில் பதாகை பிரதான சாலை உள்ளது. அங்குள்ள திருமுல்லைவாயில் சாலை எதிரே, பழமைவாய்ந்த சுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது.கோவிலுக்கு வரும் பக்தர்கள் பயன்பாட்டிற்காக, கோவிலை ஒட்டி பெருமாள் கோவில் பேருந்து நிறுத்தம் உள்ளது.கடந்த ஆண்டு, கோவில் பதாகையில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு முன், நிழற்குடை சரிந்து விழுந்தது. ஆனால் அதை அகற்றி, புது நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது, அப்பகுதியில் பகுதிவாசிகள், வாகனங்களில் செல்வோர், குப்பை வீசி வருகின்றனர். நிழற்குடை இல்லாததால், அப்பகுதியில் பேருந்தும் நிற்பதில்லை.இதனால், பக்தர்கள் கோவில் பதாகை, நாவிதர் தெரு நிறுத்தத்தில் இறங்கி நடந்து செல்கின்றனர். இது ஒருபுறம் இருக்க, ஆவடி கன்னடபாளையத்தில் உள்ள பேருந்து நிறுத்தமும் சாய்ந்த நிலையில் அபாயகரமாக காட்சி அளிக்கிறது.- சேகர், கோவில் பதாகை.