உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / காலி நிலத்தில் தி.வி.க., கட்டடம் மோதலை தடுக்க போலீஸ் பாதுகாப்பு

காலி நிலத்தில் தி.வி.க., கட்டடம் மோதலை தடுக்க போலீஸ் பாதுகாப்பு

மேட்டூர், சேலம் மாவட்டம் மேட்டூர், கிழக்கு பிரதான சாலையோரம் வசிப்பவர் ரகுலன், 60. இவரது அனுபவத்தில் பொன்னகர் கால்வாய் கரையோரம் நிலம் இருந்தது. அதன் ஒரு பகுதியில், தி.வி.க., நிர்வாகிகள், சிறு கட்டடம் கட்டி சுற்றி வேலி அமைத்து கொடி கம்பமும் நட்டனர். இதற்கு ரகுலன் எதிர்ப்பு தெரிவிக்க, இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாக, அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இதுகுறித்து மேட்டூர் தாசில்தார் விஜி கூறுகையில், ''இரு தரப்பினரிடம் விசாரித்து, ஆவணங்கள் இருப்பவரிடம் நிலம் ஒப்படைக்கப்படும். இல்லை எனில் வருவாய்த்துறை நிலத்தை கையகப்படுத்தும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை