உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : நீர்நிலைகளில் பாதுகாப்பு

தகவல் சுரங்கம் : நீர்நிலைகளில் பாதுகாப்பு

தகவல் சுரங்கம்நீர்நிலைகளில் பாதுகாப்புஉலகில் ஆண்டுதோறும் 2.36 லட்சம் பேர் நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர். இதை தடுக்கும் விதமாக ஐ.நா., சார்பில் ஜூலை 25ல் உலக நீரில் மூழ்குவதை தடுக்கும் தினம் கடைபிடிக்கப்படுகிறது. நடுத்தர வருமானம் உடைய நாடுகளில் ஆறு, ஏரி, கிணறு, வீடுகளில் நீர் தொட்டிகள் போன்றவற்றில் தான் 90 சதவீத இறப்புகள் நிகழ்கின்றன. நீச்சல், நீர் பாதுகாப்பு, நீர்நிலைகளில் இருந்து மீட்கும் பணி போன்றவற்றை குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும். கப்பல், படகுகளிலும் செல்லும் போது முறையான பாதுகாப்பு உபகரணங்களை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !