உள்ளூர் செய்திகள்

மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு!

கடந்த, 1980ல், அருப்புக்கோட்டை, தேவாங்கர் பள்ளியில், 10ம் வகுப்பு படித்த போது,நடந்த சம்பவம் இது. எங்கள் வரலாற்று ஆசிரியர், 'மத ஒற்றுமைக்கு எல்லாரும் ஒரு உதாரணம் சொல்லுங்கள்...' என்றார். பலரும், ஒவ்வொன்றாக சொல்ல, சற்குணம் என்ற மாணவன், 'நம் ஊர் தான் சார்...' என்றான்.'எப்படி சற்குணம்...' என்றார் ஆசிரியர்.'பாளையம்பட்டியிலிருந்து, நான் பள்ளிக்கு வரும் போது, மகாராணி தியேட்டர் ஸ்டாப்பிற்கு அடுத்து, தொடர்ச்சியாக, சர்ச், பள்ளிவாசல், சிவன் கோவில் என்று, மூன்று ஸ்டாப் வருகிறது; அதனால், நம் அருப்புக்கோட்டையும், மத ஒற்றுமைக்கு ஒரு உதாரணம் தானே சார்...' என்றான். அவன் கூறிய பதிலால், ஒரு கணம் திகைத்த ஆசிரியரும், நாங்களும் உண்மையை உணர்ந்தோம்.தன் பேனாவை, ஆசிரியர், சற்குணத்திற்கு பரிசாக வழங்கியதை நினைத்தால், இன்றும் என் மனம் இனிக்கிறது.- பா.பவித்ரா, காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !