ஆன்ட்பிட்டா!
மயில் ஆடும், குயில் பாடும், நாய் குரைக்கும் என்றுதான் படித்திருக்கிறோம். ஆனால், இவற்றில் இருந்து மாறுபட்டும் சில உயிரினங்கள் இருக்கின்றன.தென்அமெரிக்காவில் பசிபிக் பெருங்கடலை ஒட்டியிருக்கும் நாடு ஈக்வடார். இங்கு ஆண்டிஸ் மலைத் தொடரின் அருகே உள்ள அடர்ந்த காடுகளில் 'ஆன்ட்பிட்டா ரிட்கிளே' என்ற பறவை உள்ளது. கொக்கு, நாரை போலவே பெரும்பாலும் ஒற்றைக் காலில் நிற்கும் பறவை இது. சற்று குண்டாக இருக்கும்.பறவை என்றால் குக்கூ, கிக்கீ... என்றுதானே பொதுவாகக் கத்தும். ஆனால், ஆன்ட்பிட்டா அப்படி கத்தாது. 'லொள் லொள்' என்று நாய் போல குரைக்கும்.ஈக்வடார் காடுகளில் இப்படி ஓர் அதிசயப்பறவை இருக்கிறது என்பதையே 1998ம் ஆண்டில்தான் கண்டுபிடித்தனர். கண்டுபிடித்தவர் 'ராபர்ட் ரிட்கிளே' என்ற ஆராய்ச்சியாளர். தனது பெயரையே அதற்கும் வைத்தார்.