நீயா? நானா?
ஒரு வீட்டின் மூலையில் மூட்டைப் பூச்சியும், கொசுவும் சந்தித்துக் கொண்டன. ''கொசுவே, நான்தான் இந்த வீட்டு மனிதர்களின் ரத்தத்தை அதிகமாக உறிஞ்சிக் குடிக் கிறேன்,'' என்றது மூட்டைப் பூச்சி.''மூட்டைப் பூச்சியே, உன்னுடைய எண்ணம் தவறாகும். நான்தான் இந்த வீட்டு மனிதர்களின் ரத்தத்தை அதிகமாக உறிஞ்சிக் குடிக்கிறேன்,'' என்றது கொசு.''கொசுவே, நான் தலையணையின் உள்ளேயும், கட்டிலின் விளிம்புகளில் இருந்து கொண்டும் மனிதர்களின் ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கிறேன். நீயோ ஓரிடத்தில் நிலையாக இருக்காமல், அப்படியும் இப்படியுமாக பறந்தபடி ரத்தத்தை உறிஞ்சியும், உ<ரியாமலும் இருந்து கொண்டிருக்கிறாய். கணக்குப் போட்டுப் பார்த்தால், உன்னை விடவும் நான்தான் அதிகமான ரத்தத்தை உறிஞ்சியபடி கொழு கொழுவென்று இருக்கிறேன்,'' என்றது மூட்டைப் பூச்சி.''பூச்சியே, நீ ஏதோ உன்னையே பெருமையாக நினைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறாய். என்னைப் பற்றியும் சிறிது சிந்தனை செய்து பார். நான் ஒரே நிமிடத்தில் எங்கெல்லாமோ பறந்து சென்று யார் யாரை யெல்லாமோ கடித்து அவர்களின் ரத்தத்தைப் பருகுவேன். என்னைப் போன்ற திறமை மிக்கவர் எவரும் இந்த <உலகத்தில் இல்லை.''நீ ஒரே வீட்டை நம்பியும், அந்த வீட்டில் உள்ள மனிதர்களை நம்பியும், உயிர் வாழ வேண்டும். ஆனால், நானோ அப்படியில்லை. நான் நினைத்த நேரத்தில் எத்தனை வீடுகளானாலும் பறந்து செல்வேன். அங்குள்ள மனிதர்களைக் கடித்து அவர் களின் ரத்தத்தைக் குடிப்பேன்,'' என்றது கொசு.இதனைக் கேட்டதும் மூட்டைப் பூச்சிக்கு ஆத்திரம் ஏற்பட்டது.''கொசுவே, நீ ஒவ்வொரு இடமாக அலைந்து சாதிக்கிறாய். நானோ, இருந்த இடத்திலேயே இருந்துகொண்டு சாதிக்கிறேன். அதனால் உன்னைவிடவும் நான் தான் சிறந்தவன்,'' என்றது மூட்டைப் பூச்சி.''நீ என்னதான் சாமர்த்தியமாகப் பேசினாலும் நானே பெரியவன்; சிறந்தவன்; என்பதை நீ ஒருபோதும் மறந்துவிடாதே,'' என்றது கொசு.மூட்டைப்பூச்சியும், கொசுவும் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொண்டிருப்பதைப் பல்லி கவனித்தது. அது வேகமாக அவைகளின் அருகே வந்தது.''கொசுவே, மூட்டைப்பூச்சியே, நீங்கள் இருவரும் நீண்ட நேரமாக ஒருவரை ஒருவர் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறீர்களே... உங்கள் இருவருக்கும் சமாதானமே ஏற்படாதா?'' என்று கேட்டது.''ஆமாம் பல்லியே, எங்கள் இருவருக்கும் சாமாதானம் ஏற்படாது. எங்கள் கருத்துக்களில் வேற்றுமை இருக்கின்றன. அதனால் எங்களுக்குள் சமாதானம் ஏற்படுவது அரிதுதான்,'' என்றது கொசு.''மூட்டைப்பூச்சியே நீ என்ன சொல்கிறாய். இந்தக் கொசு உன்னோடு சமாதானத்திற்கு வராது போன்று தெரிகிறது. எனவே, நீயாவது இந்தக் கொசுவோடு சமாதானம் செய்து கொள். எதற்காக, நீங்கள் ஒருவரை ஒருவர் சண்டை யிட்டுக் கொள்கிறீர்கள்?'' என்று கேட்டது பல்லி.''பல்லியே, கொசு எனக்கு தலை வணங்காத போது நான் ஏன் அதற்காக தலைவணங்க வேண்டும்? நான் சமாதானம் செய்து கொள்ள மாட்டேன். கொசுவை விடவும் மேலும் என்னுடைய ஆத்திரத்தைக் காட்டுவேன்,'' என்றது மூட்டைப் பூச்சி.''பல்லி சிறிது நேரம் யோசனை செய்தது. இரண்டுமே ஆணவம் பிடித்து அலைகின்றன. அதனால், இவை இரண்டையும் நாம் விழுங்கி ஏப்பம் விட வேண்டியதுதான்,'' என்று முடிவு செய்தது.''பல்லியே, என்ன யோசித்துக் கொண்டிருக் கிறாய்?'' என்று கேட்டன கொசுவும், மூட்டைப் பூச்சியும்.''கவலைப்படாதீர்கள். உங்கள் இருவரையும் நிரந்தரமாகவே சமாதானப்படுத்தி விடுகிறேன்,'' என்று கூறியபடி இரண்டையும் படீரென பிடித்து விழுங்கிக் கொண்டது பல்லி.***