உள்ளூர் செய்திகள்

விண்வெளி சுற்றுலா!

கோடைக்காலத்தில் ஊட்டி, கொடைக்கானல் என சுற்றுலா செல்வதைப் போல, விண்வெளிக்கும் சுற்றுலா செல்லும் காலம் விரைவில் வர இருக்கிறது. விண்வெளி வீரர்கள் மட்டுமே விண்வெளிக்குச் சென்று வந்த நிலைமை மாறி, சாதாரண மனிதர்களையும் அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது.அமெரிக்க நிறுவனம் ஒன்று இதற்கான சோதனைக்காக ஆளில்லாத விண்வெளி ஓடம் ஒன்றைக் கடந்த வருடம் அனுப்பி இருந்தது. இந்த ஓடம் வெற்றிகரமாக விண்வெளியைச் சுற்றி வந்து உள்ளது. 27 கோடி மைல்கள் தூரம் அந்த ஓடம் சுற்றி வந்துள்ளது.4.4 மீட்டர் நீளமும், 8 மீட்டர் அகலமும் கொண்ட இந்த விண்வெளி ஓடம் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மனிதர்கள் செல்லக்கூடிய வகையிலான விண்வெளி ஓடங்களை பிரம்மாண்டமாக வடிவமைத்து மனிதர்களுடன் சேர்த்து அனுப்ப திட்டமிட்டுள்ளனர். சூப்பர் சுற்றுலா!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !