உள்ளூர் செய்திகள்

அதிமேதாவி அங்குராசு!

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!ராணுவ தீவின் ராஜா ராணி!சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தீவில் ஒரு தம்பதியர் 25 ஆண்டுகளாக வசிக்கின்றனர். சீனாவின் ஜியாங் மாகாணத்தில் உள்ள கடற்கரை நகரம் லியான்யுங்கஸ். இங்கிருந்து சிறிது தூரத்தில் மஞ்சள் கடலில் ஒரு தீவு உள்ளது. திருச்சி மலைக்கோட்டை கடல் நடுவே இருந்தால் எப்படியிருக்கும்... அதுபோன்ற அமைப்பு.சராசரியான கிரிக்கெட் மைதானத்தை விட சிறியது. ராணுவத்திற்கு சொந்தமான சில கட்டடங்கள், ராணுவ பயன்பாட்டுக் கான டவர்கள் ஆகியவை மட்டுமே இங்கு உள்ளன. இந்த தீவில் ஒரே ஒரு தம்பதி மட்டுமே வசிக்கின்றனர். அவர்கள் பெயர் ஜிகாய் (52) வாஸ் ஷிகுவா (50). தீவில் தனியாக வசிக்கும் அனுபவத்தை அவர்கள் கூறுகின்றனர்.''பிழைக்க வழி தேடி 1986ம் ஆண்டில் இங்கு வந்தோம். இது ஆளில்லாத தீவு என்று பிறகுதான் தெரியவந்தது. ஆனாலும் இங்கேயே தங்கிவிட்டோம். கடல் எல்லை மற்றும் வான் எல்லையை கண்காணிக்கும் பொறுப்பை ராணுவத்தினர் எங்களிடம் ஒப்படைத்தனர்.''வழிதவறி இந்த பக்கம் வரும் கப்பல், படகுகளுக்கு வழிகாட்டுகிறோம். படகில் வருபவர்களுக்கு ஏதாவது ஆபத்தோ, விபத்தோ ஏற்பட்டால் உதவுகிறோம். குடிக்க இங்கு தண்ணீர் கிடையாது. லியான்யுங்கஸ் நகரில் இருந்துதான் எடுத்து வரவேண்டும். திடீரென தண்ணீர் தீர்ந்து போனால் சிக்கல்தான். 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை கரன்ட் கிடையாது. பிறகு ராணுவம்தான் ஜெனரேட்டர் ஏற்பாடு செய்து கொடுத்தது,'' என்கின்றனர்.ராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதி என்பதால் தினமும் தேசிய கொடியை ஏற்றி விட்டு, அவர்கள் இருவர் மட்டும் சல்யூட் அடிக்கின்றனர்.தேசிய பாதுகாப்பு திட்டத்தின் சிறப்பு மேனேஜர் என்ற அந்தஸ்த்தை ஜிகாய்க்கு ராணுவம் வழங்கியுள்ளது.'ஆளில்லா தீவில் தனியாக இருப்பது போரடிக்கலையா?' என்று கேட்டால் சிரிக்கின்றனர்.''25 வருடமாக தனியாகத்தான் இருக்கிறோம். ஆரம்பத்தில் தனிமை மிக கொடுமையாக இருந்தது. இப்போது பழகிவிட்டது. இந்த தீவு சாம்ராஜ்யத்துக்கே, நாங்கள்தான் ராஜா-ராணி என்று நினைத்து பெருமைப்பட்டு கொள்கிறோம்,'' என்கின்றனர்.என்ன ஒரு வித்தியாசமான வாழ்க்கை அவர்களுக்கு அமைந்து இருக்கிறது. ஒருவருக்கு மற்றவர்தான் உலகம் என்று வாழ்கின்றனர்.ஓல்டஸ்ட் மம்மி ஓட்சி!அறிவியல் உலகில் அதிரடி திருப்பு முனையாக உலகத்தை பிரமிக்க செய்த ஒரு தகவல் இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.உடலிலிருந்து ரத்தம் வெளியேறிய கண நேரத்தில் காற்று அதன் மேல் பட்டவுடன், ரத்தம் இறுகி கெட்டியாகி, கட்டியாகிவிடும். இதுதான் ரத்தத்தின் இயல்பு தன்மை. சிவப்பு அணுக் களின் ஆயுள் என்பது சுமார் 120 நாட்கள் மட்டுமே.அதற்குள் அவை தன் உருவிழந்து மறைந்து விடும். ஆனால், சுமார் 5,300 ஆண்டுகளுக்கு முன் இறந்த மனிதன் ஒருவனின் உடலிலிருந்து ரத்தம் எடுக்கப்பட்டு, அன்றைய மனித ரத்த கலங்களின் தன்மையும் கண்டறியப்பட்டுள்ளது.1991ல் ஓட்சி என்ற பனி மனிதனை இரண்டு மலையேறிகள் ஆஸ்திரிய- இத்தாலிய எல்லையில் அமைந்துள்ள ஆல்பைன் பனியாற்றில் இருந்து கண்டெடுத் தனர்.தற்போதைய அறிவியல் தகவல்படி, உலகில் அதிக வயதுள்ள, நன்றாக இயற்கை யான முறையில் பதப்படுத்தப் பட்டுள்ள 'மனித மம்மி' இது மட்டுமே.இதில் பல ஆராய்ச்சிகள் செய்கின்றனர். இந்த உடலை கண்டுபிடித்து 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் கூட இதனை பற்றிய ஆராய்ச்சிகள் இன்னும் முடிந்தபாடில்லை.ஆஸ்திரியாவிலுள்ள ஆறாவது உயரமான மலை இது. இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,210 மீட்டர் (10,500 அடி)ஆனால், இதில் ஜோசப் ராபைனேர் மற்றும் தொயோடோர் காசெரர் ஆகிய இருவரும் அந்த மலை மீது ஏறுகின்றனர். இதன் மலை சரிவில் தான் ஹெல்முட் சைமன் மற்றும் எரிக்கா சைமன் இருவரும் 1991ம் ஆண்டு அங்குள்ள பனியாற்றில் ஒரு மனிதனை கண்டுபிடிக் கின்றனர்.ஓட்சி என்ற இடத்திலிருந்து அந்த மனிதனை கண்டுபிடித்ததாலும், அவன் பனியில் உறைந்து பதப்படுத்தப்பட்டிருந்ததாலும் 'ஓட்சி பனி மனிதனை' என்று செல்லமாய் அழைக்கின்றனர்.ஆனால், அவன் தாமிர காலத்திற்கு முற்பட்ட ஐரோப்பிய மனிதன் என்றும் கருதப்படுகிறது. இப்போது இந்த பனி மனிதனும், அவனது சொத்துக்களான உடை மற்றும் பொருள்களும், இத்தாலியின் தெற்கு டைரோளில் உள்ள போல்சானோவின் அருங்காட்சியகத்தில் (குணிதtட கூதூணூணிடூ Mதண்ஞுதட் ணிஞூ அணூஞிடச்ஞுணிடூணிஞ்தூ டிண ஞணிடூத்ச்ணணி ண்ணிதtட கூதூணூணிடூ, ஐtச்டூதூ) வைக்கப்பட்டுள்ளது.பனி மனிதன் காயத்தில் உறைந்திருந்த ரத்த கலம்தான், நாம் இதுவரை அறிந்தவற்றில் மிக மிக பழமையான ரத்த கலம். பனிமனிதன் உடலில் இரண்டு காயங்கள் காணப்படுகின்றன. அதில் ஒன்று கூர்மையான ஆயுதம் தாக்கியதற்கு தடயமாக உள்ளது. உலகில் இதுவரை அதிகமாக ஆராயப்பட்ட ஒரு மம்மி உண்டென்றால் அது ஓட்சிதான். அவன் பைநேல்ச் பிட்ஸ் மற்றும் சிமிளைன் மலைகளுக்கிடையே உள்ள ஹார் லாப்ஜீ என்னும் இடத்தில் ஓட்சி பள்ளத்தாக்கில் கிடந்திருக்கிறான். இந்த பகுதியில் ஓட்சி பள்ளத்தாக்கின் ஓரங்களை அலங்கரிக்க அடுக்கி வைத்தது போல வரிசையான ஆல்ப்ஸ் மலை தொடர்கள் காணப்படுகின்றன.அங்கே ஓட்சி ஆல்ப்ஸ் பள்ளத்தாக்கில் இன் (ஐணண ணூடிதிஞுணூ) நதியில் பனி பாளங்களுக்கிடையே சொருகி கிடந்திருக்கிறான் இந்த மனிதன்.இப்பகுதி ஆஸ்திரிய, இத்தாலிய எல்லை யில் உள்ளது என்பதால் இது இரு நாடுகளுக்கும் சொந்தமானது.இதுவரை கிடைத்த ஐரோப்பிய மம்மி களிலேயே இதுதான் நன்கு இயற்கையில் பதப்படுத்தப்பட்ட மனித மம்மியாகும். ராயல் சொசைடி இன்டர்பேஸ் என்ற அறிவியல் பத்திரிகையில் 2012 மே முதல் நாள் ஓட்சி பற்றிய புதிய கண்டுபிடிப்பு தகவல் வந்துள்ளது.அதுதான் ஓட்சியின் இறப்பு பற்றிய தெளிவான கதையை விலாவாரியாக நம் முன்னே விரித்து வைக்கிறது. அவன் நல்ல ஆரோக்கிய மான உடல் நிலையில் இருந்திருக் கிறான். அவன் ஏன் இறந்தான் என்ற காரணமும் கண்டுபிடிக்கப் பட்டுவிட்டது. ஒரு அம்பு பாய்ந்து இறந்திருக்கிறான்!என்றென்றும் அன்புடன், அங்குராசு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !