உள்ளூர் செய்திகள்

அதிமேதாவி அங்குராசு!

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!8 ஆயிரம் அடி உயரத்தில் ஒரே ஒரு ஆள்!ஒரு தெருவில் ஒருவர் மட்டுமே வாழ்கிறார் என்றால் நம்மால் நம்ப முடியாது. அப்படி யிருக்கும்போது ஒரு ஊரில் ஒரே ஒருவர் மட்டும் வாழ்கிறார் என்றால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா?ஆனால், அது உண்மை.அமெரிக்காவில், லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள 'புபோர்டு' என்ற மலைக் கிராமம்தான் அது. அங்கு தனி ஆளாக வசிப்பவர் 'டான் சம்மன்ஸ்.'டானு... டானு... டானு! சீனு... சீனு... சீனு! என்று பெயருக்கு ஏற்றாற்போலவே அவர் ஒரு டானாத்தான் இருந்திருக்கிறார்.இல்லாவிட்டால் 8 ஆயிரம் அடி உயரம் கொண்டு மேகங்கள் தவழும் கடுங்குளிரில் தனி ஆளாக வாழ முடியுமா?லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 1980ல்தான் வியாபாரம் செய்து வந்த டான் சம்மன்ஸ் அங்கு குடியேறினர். அந்த நகரை அவர் வாங்கியபோதும் 6 கட்டங்கள் மட்டுமே இருந்தன.ஆனால், வசிப்பவர் ஒரே ஒருவர் கூட இல்லை. இது குறித்து அவர் கூறும் போது பல மைல் சுற்றளவில் நான் மட்டுமே இருக் கிறேன். இந்த தனிமையையும், அமைதியை யும் நான் மிகவும் விரும்புகிறேன். என்னுடைய வளர்ப்பு பிராணிகளான குதிரைகள், நாய்கள், பூனைகள் ஆகியவற்று டன் மகிழ்ச்சியாக வாழ்க்கையை அனுபவிக் கிறேன். கோடை காலத்தில் 1000 சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். அவர் களுடன் பேசிக் கொண்டு இருப்பதால் எனது பொழுது போகிறது என்கிறார்.ஒரு தனி மனிதன் மேம் பட்டால், அது உலகம் வரை நீளும்.ஒவ்வொருவரும் நல்லவரானால் உலகமே நல்லதாகிவிடும்.கலாம் காலம்!வாழ்க்கையில் முன்னேற முதலில் மிகப்பெரிய லட்சியம் வேண்டும். சிறு லட்சியம் குற்றமாகும்.அடுத்து, அறிவை தேடிப் தேடிப் பெற வேண்டும். மூன்றாவது, கடுமையாக உழைக்க வேண்டும். நான்காவது, விடாமுயற்சி வேண்டும். இந்த நான்கும் இருந்தால், எண்ணிய லட்சியத்தை எண்ணியவாறே அடையலாம்.கடலை காபி, டீ!நிலக்கடலையை சேர்த்து பல உணவுகளை புசித்திருக்கிறோம்.இப்போது, 'நிலக்கடலை பானம்' செய்வோமா?தேவையான பொருட்கள்:- 1/4 கிலோ பச்சை நிலக் கடலைப் பயிர் அல்லது உலர்ந்த பயிரை நீரில் ஊற வைத்து அரைத்து பாலை வடிக்கட்டலாம்.பச்சை நிலக்கடலையை அப்படியே அரைத்து நீருடன் வடிகட்டி பால் எடுத்து காய்ச்சவும்.செய்முறை: காபி டிக்காக் ஷன் அல்லது டீ டிக்காக் ஷனில் சர்க்கரை சேர்க்கவும்.பின் டீயின் மேலே எடுத்த வைத்த வடிகட்டிய பாலை சேர்த்து பருகலாம். அல்லது காபியில் மேல சொன்ன பாலை சேர்த்துப் பருகலாம்.நிலக்கடலை டீ அல்லது காபி சத்தானது உடலுக்கு ஏற்றது.புதுமையான பானத்தைப் பருகிப் பாருங்கள்.என்றென்றும் அன்புடன், அங்குராசு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !