அதிமேதாவி அங்குராசு!
வந்தேமாதம்! என் தாய்நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!காலணிகளை இப்படி அணி!அலங்காரத்துக்குக்கென்று காலணிகள் அணிவதை விட வசதிக்கேற்ற காலணிகளை அணிந்து கொள்வதுதான் சிறந்தது. தினசரி உபயோகத்துக்கு தட்டையான அடிப்பாகம் கொண்ட செருப்புகளும், ஷூக்களும்தான் பெஸ்ட். விசேஷங்கள், விழா போன்ற தருணங்களுக்கு ஹீல்ஸ் வகை காலணிகளை அணியலாம். அப்போதும் 'பாய்ன்டட் ஹீல்ஸ்' வகைகளை தவிர்த்து, அடிப்பாகம் முழுக்கவே உயரமாக இருக்கும் ப்ளாக் ஹீல்ஸ் கொண்ட செருப்புகளை அணியலாம். அதுதான் இப்போது பேஷணும் கூட. நீங்கள் சல்வார் அணிந்தால், ஆடையின் நிறத்துக்கு கான்ட்ராஸ்ட்டான ப்ளாட் வகை செருப்புகள் பொருத்தமாக இருக்கும். ஜீன்ஸ் அல்லது முட்டிக்கு மேலே இருக்கும் ஆடைகளை அணிவீர்கள் என்றால், ப்ளாக் ஹீல்ஸ் கொண்ட காலணிகள் அணியலாம்.சீனாதான் கிளப்பியது மர்மங்களை!கதைகள் என்றால் எல்லாருக்கும் பிடிக்கும். எல்லா கதைகளும் எல்லாருக்கும் பிடிக்காது. குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள், ஆண்கள் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி கதைகள் பிடிக்கும். இன்று சீரியல் என்னும் சீரழிக்கும் விஷயம் உள்ளதே, அதுவும் கதைதான்.கதைகளில் மர்ம நாவல்களின் பங்கு முக்கியமானது. மர்ம நாவல்கள் புத்தகம் படிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது.மர்ம நாவல் தோன்றியது எப்படி?சீனர்களின் கண்டுப்பிடிப்புகளுக்கு அளவே லேது! அங்கே ஸீங் பரம்பரை ஆட்சி செய்த போதே (கி.பி.960 துவக்கம்) க்ரைம் நாவல் வந்துவிட்டது. ஆனால், டிடெக்டிவ் ஸ்டோரி கி.பி.1700-ல் தான் வந்தது. அதுவும் சீனாவில்தான்! நாவலின் பெயர் 'வூ ஸே டியன் ஸீ தா சீ ஆரன்' ஒரு நீதிபதி தனிப்பட்ட முறையில், இரவுகளில் அலைந்து மூன்று குற்றவாளிகளை கண்டுப்பிடிக்கிறார். அந்த நாவல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அதன் பெயர், ' The Celebrated Cases of Judge Dee 'தாய்க்கு... தாய்க்கு... தாய்!உயிரினங்களின் தாய் - பூமிபூமிக்கு தாய் - சூரியன்.சூரியனின் தாய்... பால்வீதி பால்வீதியில் சூரியன் போல 40 ஆயிரம் கோடி சூரியன்கள் உண்டு.(கொஞ்சம் முன்னே பின்னே இருக்கலாம்) பூமி சக்கரம் போல சுழலும் பால்வீதியின் நடு மையத்தில் என்ன இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது.ஆனால், 'பால் வீதி தாய்' ரொம்ப பெரியவள். அதாவது சூரியனுக்கு மிக அருகிலுள்ள உள்ள பக்கத்து வீட்டுக்கார நட்சத்திரம் 'ப்ராக்ஸிமா ஸென்ட்டாரிக்கு ஒரு விநாடிக்கு 1 லட்சத்து 86 ஆயிரம் மைல் வேகத்தில் சென்றால், (ஒளியின் வேகம்) அதை அடைய 4.3 ஆண்டுகள் ஆகும். எவ்வளவு வேகம் எவ்ளோ தூரம்!அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!இது 'அரை நெல்லிக்காய் சாதம்' செய்முறை நேரம்!தேவையானவை: பச்சரிசி 2 கப், அரை நெல்லிக்காய் அரை கப், பச்சை மிளகாய் 10, தேங்காய் துருவல் இரண்டு டீஸ்பூன், பெருங்காயம் 1 டீஸ்பூன், கடுகு, உளுந்து, மஞ்சள்தூள் தலா அரை டீஸ்பூன், எண்ணெய் 4 டேபிள் ஸ்பூன், கறிவேப்பலை சிறிதளவு, உப்பு தேவைக்கு.செய்முறை: அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடியுங்கள். நெல்லிக்காய்களை சுத்தம் செய்து கொட்டைகளை நீக்குங்கள்.1 டேபீள் ஸ்பூன் எண்ணெயில் பச்சை மிளகாய் மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து வதங்குங்கள். பிறகு நெல்லிக்காய், மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி நைசாக அரைத்தெடுங்கள். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுந்து, பெருங்காயம், கறிவேப்பலை, ஆகியவற்றை தாளியுங்கள்.சாதத்தில் நெல்லிக்காய் விழுது, கடுகு ஆகியவற்றை சேர்த்து கிளறுங்கள்.வெடிக்குது தர்பூஸ்!பட்டாசு வெடிக்கும், தர்பூஸ் வெடிக்குமா!வெயில் காலம் என்றாலே தர்பூசணி பழத்தை சுவைக்காமல் இருக்க முடியாது. பச்சை, வெள்ளை பட்டைகளோடு முழுக்க முழுக்க அவை குவிக்கப்பட்டிருக்கும் அழகே அழகு.சீனாவிலும் இந்த பழம் அமோக விளைச்சல். நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகளுக்கு தர்பூசணி மீது ஒரு தனி அன்பு உண்டு. ஆனால், இந்த ஆண்டு தர்பூசணிக்கு சோதனை ஆண்டு. சீனாவில் ஜீயாஸ்ஸீ பகுதியில், தன்யாய் நகரில் சுமார் 115 ஏக்கர் பரப்பில் தர்பூசணி பழங்கள் விளைந்திருந்தன. அறுவடை செய்ய போகும் நேரம் விவசாயிகளின் நெஞ்சு வெடித்தது.ஏனென்றால் விளைந்திருந்த ஒவ்வொரு பழமும் தானே வெடித்து பிளந்து நின்றிருந்தன. பழம் பழுக்கும் பட், பட் என வெடிக்குமா? ஏன் என்ன காரணம்? பழம் நிறைய விளைய வேண்டும், சைஸீம் பெரிதாக இருக்க வேண்டும் என்பதற்காக வாட்டர்மெலன் விவசாயிகள் ரசாயன பொருட்கள் கலந்த உரங்களை அதிகமாக போட்டதுதான், இப்படி பழங்கள் வெடிக்க காரணம் என்று வேளான் விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர்.அந்த ரசாயன உரம் தடை செய்யப்பட்ட உரமல்ல... கடைகளில் தாராளமாக கிடைப்பதுதான். அமெரிக்காவில் திராட்சை விளைச்சலுக்கு இதை பயன்படுத்துகின்றனர். சீனாவில் தர்பூசணி விவசாயிகளுக்கு இந்த ஆண்டு என்னமோ பேராசை வந்துவிட்டது. ரசாயன உரத்தை பயன்படுத்தி பெரும் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. விவசாயிகள் காலையில் போய் பார்த்தபோதும் 80 பழங்கள் வெடித்திருந்தனவாம்.பிற்பகலில் அந்த எண்ணிக்கை நூறு ஆனது. அதனால், சோகத்தில் எண்ணுவதையே விட்டு பிளந்து இருப்பதை கண்டபோது விவசாயிகளை இதயத்தை யாரோ பிளந்து போல உணர்ந்தனராம்.இயற்கையே அதன் போக்கில் விட்டு விடணும். அதை டெஸ்ட் பண்ணித்தான் ஆகணும் என்றால் மெல்ல மெல்ல டெஸ்ட் செய்யணும்.அன்புடன்,அங்குராசு.