உள்ளூர் செய்திகள்

அதிமேதாவி அங்குராசு!

வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!பாட்சி - காஸ்ட்சி சாக்கி!சாக்லெட்டுகள் இப்போது ஏராளமாக விற்கப்படுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில், அனைத்து வயதினரும் சாக்லேட்டை விரும்பி சாப்பிடுகின்றனர். லெபனான் நாட்டை சேர்ந்த சாக்லெட் தயாரிப்பாளரான பாட்சி, உலகிலேயே விலை மிகுந்த சாக்லெட்டுகள் தயாரித்து விற்பவர் . இவர் விற்ற 2008 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ஒரு சாக்லேட் பெட்டியின் விலை 55 ஆயிரம் பரிட்டிஷ் பவுண்ட். இது ஒரு அரிய வகை சாக்லெட் என்கிறார். இந்த சாக்லேட் பெட்டிகளின் மேல் பதிக்க இந்தியாவிலிருந்து வர வழைக்கப்பட்ட பட்டுத் துணியை பயன்படுத்தினராம். இந்தியாவில் ஆண்டு ஒன்றிற்கு 2000 கோடி ரூபாய் அளவுக்கு சாக்லெட்டுகள் விற்கப்படுகின்றன. ஆகையால் இந்தியாவில் விலை மிகுந்த சாக்லேட்டுகளை தயாரித்து விற்க திட்டமிட்டு உள்ளார் பாட்சி. இந்தியாவா ஏழை நாடு?மரம் வெட்டுராங்க!அமெரிக்கா-பேஸ்பால் மட்டை தயாரிக்க மரங்களை வெட்டி கொண்டே இருக்கிறது. அதே போல் சீனா ஆண்டுதோறும் 45 பல்லியன் சாப்ஸ்டிக் குச்சிகள் (உணவு உண்ண பயன்படும் குச்சிகள்) தயாரிக்க இரண்டரை கோடி மரங்களை வெட்டி கொண்டே இருக்கிறது.இதே நேரத்தில் நாட்டின் பரப்பளவில் 10 சதவீதம் அதிகமாக காட்டு பகுதி இருக்கும் விதமாக காடுகளையும் சீனா உருவாக்கியுள்ளது. எடுப்பதற்கு இரு மடங்காய் விதைப்பதால் எடுப்பதற்கும் ஆபத்து வராது; இருப்பதற்கும் ஆபத்து வராது. இதே போல் நாமும் செய்தால் எவ்வளவு நல்லது.குழந்தைகளின் பிறப்பு!ஒரு வீடு என்றால் கண்டிப்பாய் 'குவா-குவா' சத்தம் இராமல் இராது. அதே ஒரு நாடு என்றால் கேட்கவே வேண்டாம். இது குழந்தைகள் பற்றிய விநோத செய்தி. ஒரு நிமிடத்திற்கு 150 குழந்தைகள் வீதம் உலகம் முழுவதும் குழந்தைகள் பிறந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், வாடிகன் நகரில் மட்டும் குழந்தை பிறப்பு விகிதமே கிடையாது. அங்கே அனைவரும் திருமணமாகாத பாதிரியர்கள் என்பதால்!நானோவை விட...மகராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமத்தில் வாழ்பவர் அஜய் மண்ட்வேகர். இவர் ஒரு விவசாயி. மாட்டு வண்டி ஒன்றை வாங்க சென்றபோது அதன் விலையை கேட்டு அதிர்ச்சி அடைந்தாராம். ஒரு மாட்டு வண்டியின் விலை இப்போது டாடாவின் நானோ காரின் விலையை விட அதிகம் என்கிறார். மலிவு விலை கார் என்று கூறப்படும் நானோ, ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ஆகிறது. ஆனால், ஒரு மாட்டு வண்டியின் விலை ஒன்றரை லட்சமாம். இந்த விலை மிகுந்த மாட்டு வண்டிக்கு ஏற்ற உயர்சாதி மாட்டை வாங்கப் போனால் அதன் விலை ஒரு லட்சம் ஆகிறது என்கிறார். காருக்கு பெட்ரோல் போடணுமே. தினம் தினம் விலை ஏறும்... பெட்ரோலை விட மாட்டுக்கு புல் மலிவுதானே மக்கா!'ஈ' புராணம்!'ஈ' என்பது அந்த எழுத்து அளவே இருப்பது. ஆனால், அதனை பற்றிய செய்திகளோ ஏராளம்! 'ஈ' தனது பின்னங்கால்களால் தான் உணவை எடுக்கும். 'ஈ'யின் உயரம் மதிப்பாக சொல்ல வேண்டுமானால், கால் சென்டி மீட்டர்தான். ஆனால், அதை போல் 130 மடங்கு உயரத்திற்கு அதனால் குதிக்க முடியும். இவை ஒரே தடவையில் 120 முட்டைகள் இடும். இவற்றிற்கு நீல நிறம் பிடிக்காது. தனக்கு தீங்கு வருவதை 30 மில்லி வினாடிக்குள் உணர்ந்து பறந்துவிடும். அதன் ஆயூள் காலம் 10 நாட்கள்தான். ரோமானியரின் அதிர்ஷ்ட சின்னம் 'ஈ' தான். தேனீக்கள் மணிக்கு 7 மைல் வேகத்தில் பறக்கும். இதற்கும் மொத்தம் 5 கண்கள். இதன் வயிற்றில் 2 இரைப்பைகள் இருக்கும். ஒரு தேன் கூட்டில் லட்சம் தேனீக்கள் கூட இருக்கும். இவை வினாடிக்கு 400 முறை தன் இறக்கையை அசைக்கிறது. 'ஈ' இனத்தை சார்ந்தது அல்ல தேனீ; அது எறும்பு இனம்!அன்றும்... இன்றும்!அப்ப இப்படி இருந்தது, முன்னகாலம் போல வருமா, எங்க காலத்துலேயெல்லாம்... இப்படி பலர் பேசறதை கேட்டு இருப்பீங்க! இதோ ஒரு ஒப்பீடு. நாள் ஒன்றுக்கு வருமானம் இது 1980 இது 2011விவசாய கூலி ஆண் ரூ.50 ரூ.250விவசாய கூலி பெண் ரூ.30 ரூ.150கொத்தனார் ரூ.120 ரூ.400கார்ப்பென்டர் ரூ.100 ரூ.400டீ மாஸ்டர் ரூ.65 ரூ.300பனியன் தொழிலாளி ரூ.40 ரூ.200மாதம் ஒன்றுக்கு வருமானம் இது 1980 இது 2011கிளார்க் ரூ.3000 ரூ.10000ஆபீஸ் சூப்பரின்டென்டன்ட் ரூ.4500 ரூ.23000பஸ்கண்டக்டர் ரூ.4000 ரூ.14000ஆரம்பப்பள்ளி ஆசிரியர் ரூ.3500 ரூ.18000கலெக்டர் ரூ.7000 ரூ.70000எம்.எல்.ஏ., ரூ.750 ரூ.50000எம்.பி., ரூ.15000 ரூ.70000இரண்டையும் ஒப்பிடுகையில் ஒவ்வொருவருக்கும் 3,4,5 மடங்கு வரை வருமானம் சம்பளம் உயர்ந்துள்ளது. கலெக்டரின் வருமானம், சம்பளம் 7,000 என்பதிலிருந்து 70,000 ஆகியுள்ளது. 10 மடங்கு அதிகரித்துள்ளது. எம்.எல்.ஏ.,யின் வருமானம்/சம்பளம் 750 என்பதிலிருந்து 50,000 எகிறியுள்ளது. 66.67 மடங்கு அதிகரித்துள்ளது. எல்லாம் நம் பணம், மக்கள் பணம் மக்கள் பணி செய்வதற்கான பணம்.அன்புடன் அங்குராசு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !