அழகிய கையெழுத்து போட்டி!
என் பெயர் K. பிரிதிஷ். நான் சென்னை தனியார் பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படிக்கிறேன். தமிழை சிறப்பு பாடமாக படித்து வருகிறேன்.தாத்தா, பாட்டி சொற்படி சிறுவர்மலர் வாசிக்க ஆரம்பித்து, இப்போது தொடர்ந்து படித்து வருகிறேன்.உங்கள் பக்கம், மொக்க ஜோக்ஸ், சிறுகதைகள், இளஸ்மனஸ் பகுதிகள் மகிழ்ச்சியையும், அறிவுரைகளையும் வழங்குகின்றன. அந்தக் கால கல்வி முறையின் சிறப்பை ஸ்கூல் கேம்பஸ் முலம் அறிந்து வியந்து போகிறேன்.எழுதவும், வாசிக்கவும் கற்றுத் தரும் 'சிறுவர்மலர்' மற்றுமொரு பள்ளியாக வழிகாட்டுவது பெருமையாக உள்ளது.கே.பிரிதிஷ் 7ம் வகுப்பு, ஷ்ரத்தா குழந்தைகள் பள்ளி, சென்னை.