உள்ளூர் செய்திகள்

வெளுத்துக் கட்டு!

எந்த விலங்கு இறந்தாலும் அங்கே தவறாது கழுகுகள், வல்லூறுகள் வந்து விடும். இந்தப் பறவைகள் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா கண்டங்களில்தான் அதிகமாக வசிக்கின்றன. இதுல ஆச்சரியம் என்னன்னா, கழுகுகள், வல்லூறுகள் பல வகைகளில் இருந்தாலும், உணவுக்காக ஒண்ணை ஒண்ணு அடிச்சுக்கறதில்ல. யார் முதலில் அந்த உணவைச் சாப்பிடறது, அடுத்தது யார்னு மனசுல திட்டம் வெச்சிருக்குமாம்.உதாரணத்துக்கு, கிழக்கு ஆப்பிரிக்க வல்லூறுங்க ஏதாவது இறந்த விலங்கைப் பார்த்தா, முதலில் பெரிய சைஸ் கருப்பு வல்லூறுதான் சாப்பிடும். அதுவரை மத்த கழுகுகள், வல்லூறுகள் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கிட்டிருக்கும். அப்புறம் அதுங்க முறை வரும்போது புகுந்து வெளுத்துக் கட்டும். என்ன ஒழுங்கு பாருங்க!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !