எருமைத்தோல்!
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1990ல், 7ம் வகுப்பு படித்தபோது வகுப்பு ஆசிரியராக இருந்தார் ராஜேந்திரன். அறிவியல் பாடமும் நடத்தி வந்தார்.குருவுக்குரிய முழுமையான தகுதியுடன் வணங்குவதற்கு ஏற்றவராக விளங்கினார். சுவாரசியமிக்க அறிவியல் செய்திகளை அவ்வப்போது கூறி வியக்க வைப்பார்.அன்று செய்தித்தாளை பிடித்தபடி, 'இந்த பேப்பரை விடவும், மனித உடலில் தோல் மிகவும் மெல்லியது. இனிமேல், யாரையும் எருமை மாடு என்று, திட்டி சண்டை போட்டு வம்பு வளக்காதீங்க...' என எளிமையாக விளக்கினார். விழுந்து விழுந்து சிரித்து அந்த பாடத்தை கற்றோம்.தற்போது, என் வயது, 41; தபால் துறையில் ஊழியராக பணிபுரிகிறேன். ஒவ்வொரு நாளும் செய்தித்தாள் படிக்கும் போது, அந்த ஆசிரியர் கூறிய தகவல் நினைவில் நிழலாடுகிறது. இன்றும் அலைபேசியில் அவரை நலம் விசாரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன்.- ஜி.குப்புசுவாமி, கள்ளக்குறிச்சி.தொடர்புக்கு: 98401 46754