உள்ளூர் செய்திகள்

வகுப்பில் வணிகம்!

விருதுநகர், ஷத்திரிய வித்யாசாலா உயர்நிலைப் பள்ளியில், 1957ல், 10ம் வகுப்பு படித்த போது வகுப்பாசிரியராக இருந்தார் கனகசபை; நோட்டு புத்தகம், எழுதுப் பொருட்கள் மற்றும் காகிதத்தை வெளி சந்தையில் வாங்கி, வகுப்பறையில் அதிக விலையில் விற்பார். தேவைப்படுவதை அவரிடம் மட்டும் தான் வாங்க வேண்டியிருந்தது. மறுத்தால் கண்டிப்புடன் தண்டனை தருவார்.அன்று, கணிதபாட தேவைக்காக, 'ஜியோமெட்ரி பாக்ஸ்' ஒன்றை வெளியில் வாங்கியிருந்தேன். இது தெரிய வந்ததும், வகுப்பறையில் இருந்து என்னை வெளியேற்றி விட்டார்.பள்ளி வளாகத்தில் இலக்கின்றி அலைந்த என்னிடம், 'வகுப்புக்கு செல்லாமல் வெளியே சுற்றுகிறாயே ஏன்...' என்று கேட்டார், தலைமை ஆசிரியர் தங்கபாண்டி. நடந்த விபரங்களை கூறினேன். கனிவுடன் வகுப்பறைக்கு அழைத்து சென்றவர், 'இது, வணிகம் செய்யும் இடமல்ல...' என, ஆசிரியரை கடுமையாக எச்சரித்து, என்னை இருக்கையில் அமர வைத்தார்.தற்போது, என் வயது, 81; தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். வகுப்பறையின் புனிதத்தை காத்த அந்த தலைமை ஆசிரியரை நெகிழ்வுடன் நினைவில் கொண்டுள்ளேன்.- ஜி.ராஜா, விருதுநகர்.தொடர்புக்கு: 90477 15160


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !