கேக் அம்மா!
ஆயிரத்து அறுநூறாம் ஆண்டுகளில் இங்கிலாந்து நாட்டில் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டதாக அறிகிறோம். அந்த நாட்களில் 'தாய்மையின் ஞாயிறு' என்ற பெயரில் கொண்டாடப்பட்டது.சிறப்பு கேக்குகள் வெட்டி அன்னையர் தினத்தை ஆனந்தமாக கொண்டாடினர். அந்த கேக்குகளுக்கு 'Mother Cake' என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.அப்படி வெட்டப்பட்ட அந்த 'Mothering' சிறப்பு கேக்குகளை தங்களது அன்னையருக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் வழங்கி மகிழ்ந்தனர். அன்னையை பிரிந்து பக்கத்து ஊர்களில் பணி செய்த பிள்ளைகளும், ஏழைகளும் அந்த சிறப்பு கேக்குகளை வீட்டுக்கு எடுத்து செல்லும் வகையில் விடுப்பு விடப்பட்டன.அம்மாவே, நமக்கு கேக் போலத்தானே, அம்மாவை, கடிச்சு சாப்பிடணும் போல இருக்கும்தானே!அம்மா மட்டுமே!உலகினில் அழகியாய் தேர்ந்தெடுக்கப் பட்ட யாரும் அதிகபட்சம் 10 வருடங்கள் அழகியாய் மெயின்டெயின் பண்ணலாம். உலகினில் வயது ஆக, ஆக அழகாய் தெரிந்து கொண்டே இருப்பவர் உண்டென்றால் அது அவரவர் 'அம்மா' மட்டுமே அல்லவா!