உள்ளூர் செய்திகள்

பிரிட்டனிலுள்ள கல்தூண்கள்!

பூரிட்டனிலுள்ள கல் தூண்களின் காலம், சுமார் 5000 ஆண்டுகளாகும். இங்கிலாந்தில் இப்போது பார்ப்பதெல்லாம், பண்டைய நினைவுச் சின்னங்களின் சிதைந்து போன தூண்கள்தான். இதில் பிரமிப்பைத் தரும் விஷயம் என்னவென்றால், எந்தவித பளு தூக்கும் இயந்திரமும் இல்லாமல், அக் காலத்தில் இவ்வளவு பெரிய தூண்களை எப்படிச் சேதாரமில்லாமல் இந்தத் தனியிடத் திற்குக் கொண்டு வந்து நிறுத்தினர் என்பது தான். இந்தப் பிரமாண்ட கல் தூண்களுக்கும், அங்குள்ள ஆழக் குழிகளுக்குமான நோக்கம் அவ்வளவு சுலபத்தில் அறியப்படவில்லை. ஆயினும், ஒரு பஞ்சாங்கமாகவோ அல்லது நாட்காட்டியாகவோ, இதனைப் பயன்படுத்தி யிருக்கலாம் என்பது சரித்திர ஆராய்ச்சியாளர் கள் கொண்ட தீர்வாகும்.இந்தக் கல்தூண் கூடாரத்தில் நிறுவப்பட்ட கற்களின் அதிகபட்ச உயரம் 9 மீட்டர் எனவும், எடை 45 டன்கள் எனவும் சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !