ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (26)
ஹலோ ஸ்டூடண்ட்ஸ்... ஹவ் ஆர் யு? நீங்க எல்லாருமே ரொம்ப ஆர்வமா இங்கிலீஷ் கத்துக்குறீங்க என்பதற்கு எனக்கு வரும் கடிதங்களே சாட்சி. அப்பப்பா எத்தனை கடிதங்கள் வர்ஷி மிஸ்... வர்ஷி மிஸ் என்று ஒரே கொஞ்சல்ஸ் வேறு. எனக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கு... அதனால இன்னும் ஆழமா உங்களுக்கு ஆங்கிலம் கற்றுத்தர ஆசைப்படறேன். சரியா?போன வாரத்துல will - would, shall - should பயன்படுத்தி வாக்கியங்கள் அமைத்தோம் இல்லையா? அதை மீண்டும் பார்ப்போமா?எதிர்காலக் கருத்தை உணர்த்தும்போது ஆங்கிலத்தில் shall, can, may, will, must, ought to முதலிய துைண வினைகள் வினையுடன் சேரும். will / would - > will ன் இறந்த கால வடிவம்தான் would. இன்னது செய்வேன்- இன்னது செய்யப்போகிறேன் என்ற உறுதியான விருப்பத்தை தெரிவிப்பது.WillI will go to mumbai - நான் மும்பை செல்வேன்.They will co - operate - அவர்கள் ஒத்துழைப்பார்கள்.We will use this - நாங்கள் இதைப் பயன்படுத்துவோம்.WouldI would speak - நான் பேசுவேன்.She would watch tv - அவள், 'டிவி' பார்ப்பாள்.You would accept the post - நீ இப்பதவியை ஏற்பாய்.We would eat the cake - நாங்கள் கேக் உண்போம்.Can, Could இவை இரண்டும் பெருத்த வேறுபாடு இல்லாமல் ஒரே மாதிரியான அர்த்தத்தை தரக்கூடிய சொற்கள் ஆகும். Can என்றால் முடியும் என்று பொருள். இதன் இறந்தகால வடிவம்தான் Could.CanI can swim - என்னால் நீந்த முடியும்.You can donate - நீ நன்கொடை தர முடியும்.She can get first class - அவள் முதல் வகுப்பு பெற முடியும்.CouldHe could save money - அவன் பணம் சேர்க்க முடியும்.You could sell cycles - நீ மிதி வண்டிகளை விற்க முடியும்.She could write poems - அவள் கவிதைகள் இயற்ற முடியும்.May - Might ஒருவேளை நடைபெறலாம் அல்லது நடந்தாலும் நடக்கலாம் போன்ற இடத்தில் இவ்வாக்கியங்களை பயன்படுத்த வேண்டும்.MayI may go to mumbai - நான் மும்பை போகலாம்.We may come there - நாங்கள் அங்கே வரலாம்.She may marry saran - அவள் சரனை மணக்கலாம்.It may rain this evening - இன்று மாலை மழை பெய்யலாம்.Might I might succeed - நான் ஒருவேளை வெல்லலாம்.She might be a singer - ஒருவேளை அவள் பாடகியாக இருக்கலாம்.You might be strong - ஒருவேளை நீ பலசாலியாக இருக்கலாம்.Must - ought to செய்து தீர வேண்டும், கட்டாயம் செய்ய வேண்டும் போன்ற இடங்களில் வரும்.Must You must be honest - நீ நேர்மையாக இருக்க வேண்டும்.He must thank me - அவன் எனக்கு நன்றி சொல்ல வேண்டும்.She must be lecturing - அவள் விரிவுரை ஆற்றிக் கொண்டிருக்க வேண்டும்.Ought toThey ought to pay - அவர்கள் பணம் செலுத்த வேண்டும்.We ought to write legibly - நாம் தெளிவாக எழுதவேண்டும்.இவற்றை நன்றாக படியுங்கள்... மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்...Until then bye! bye!Varshita miss