ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (54)
குட் மார்னிங் எவ்ரிபடி...தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தக் கூடிய பொதுவான வாக்கியங்களுக்கு, அவ்வளவு உற்சாகமான வரவேற்பு கொடுத்துள்ளீர்கள். 'இந்த வாக்கியங்களை தினமும் வீட்டில் பேசி மகிழ்கிறோம். வீடு முழுவதும் ஒரே இங்கிலிபிச்சுதான்!' என்று எல்லாரும் சந்தோஷத்தில் எழுதி குவித்திருந்தீர்கள்.'இன்னும் சில வாரங்களுக்கு இதுபோன்ற வாக்கியங்களை கொடுங்க... நாங்க இப்படி பேசிப் பேசி பழகினா, எங்களுக்குள் இருக்கும் கூச்சம் போயி, பெரிய வாக்கியங்களை பேசிப் பழகுவோம்' என்று எழுதியிருந்தீர்கள். ஸோ... உங்களுக்காகவே இந்த வாக்கியங்களை கொடுக்கிறேன்... பேசி கலக்குங்கப்பா!1. Are you still studying?நீ இன்னும் படித்து கொண்டிருக்கிறாயா?2. Will you drop me at the bus stop?அந்த பஸ் ஸ்டாப்பில் என்னை விட்டுவிட முடியுமா?3. Why are you speaking like this?நீ ஏன் இப்படி பேசிக்கொண்டிருக்கிறாய்?4. Can't you try for some job?நீ ஏதேனும் ஒரு வேலை கிடைக்க முயற்சி செய்ய கூடாதா?5. Don't try to frighten me.என்னை பயமுறுத்த முயற்சி செய்யாதே.6. Will you permit me to speak?தயவு செய்து என்னை பேச அனுமதிக்கிறாயா?7. Let me work.என்னை வேலை செய்ய விடு.8. He talks to the face.அவர் முகத்துக்கு நேராக பேசுபவர்.9. Move aside.ஒரு பக்கமாக நகரவும்.10. Don't talk non - sense.உளராதே11. Never forget.எப்போதும் மறக்காதே.12. Don't beat about the bush.சுற்றி வளைத்து பேசாதே.13. Follow me.எனக்கு பின்னால் வா.14. What's your father?உன் அப்பா என்ன வேலை செய்கிறார்?15. Who can do this work?இந்த வேலையை யாரால் செய்ய முடியும்?16. What are you?நீ என்ன செய்கிறாய்?17. How are the children?குழந்தைகள் நலமா?18. What is your opinion?உங்கள் கருத்தென்ன?19. It's hot today, isn't it?இன்று நல்ல வெயில், இல்லையா?20. This car is ours.இந்த கார் எங்களுடையது.21. He is so ill that, he cannot get up.அவன் படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாத அளவிற்கு, உடல் நலமில்லாமல் இருக்கிறான்.22. She is so weak that, she cannot walk.அவள் நடக்க முடியாத அளவிற்கு பலவீனமாக இருக்கிறாள்.23. The patient is not free from danger.நோயாளி, இன்னும் அபாய கட்டத்தை தாண்டவில்லை.24. Is she preparing for the public exam?அவள் பொதுத்தேர்வுக்கு தயார் செய்கிறாளா?25. Have you done this job?நீ இந்த வேலையைச் செய்து விட்டாயா?இவற்றை நன்றாக படித்து, பேசி பழகுங்கள்... மீண்டும், அடுத்த வாரம் சந்திப்போம்!பை... பை...வர்ஷிதா மிஸ்.