மரவள்ளி பணியாரம்!
தேவையான பொருட்கள்:மரவள்ளிக்கிழங்கு துருவல் - 3 கப்தோசை மாவு - 1 கப்தேங்காய் துருவல் - 1 கப்காய்ந்த மிளகாய் - 8பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டிஎண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை:தேங்காய் துருவலுடன், காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம், மரவள்ளிக்கிழங்கு துருவல், உப்பு சேர்த்து அரைக்கவும்; அதில் தோசை மாவை கலக்கவும்.பணியாரக்கல் சூடானதும், எண்ணெய் தடவி, மாவை ஊற்றி பொன்னிறமாக வேக வைக்கவும். சுவையான, 'மரவள்ளி பணியாரம்!' தயார். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.- ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.