உள்ளூர் செய்திகள்

முந்திரி ஆரோக்கியம்!

இந்திய சமையல் அறைகளில், சுவையூட்டியாக பயன்படுவது முந்திரி பருப்பு. இனிப்பு வகை உணவுத் தயாரிப்பில் முக்கியத்துவம் பெறுகிறது. முந்திரி சாப்பிட்டால், உடல் நலம் கெடும் என்பது உண்மை அல்ல; அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் கேடு தரும். முந்திரியின் பலன்கள்:மாரடைப்பு நோய் ஏற்பட முக்கிய காரணம் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதே ஆகும். முந்திரிப் பருப்பில் குறைந்த கொழுப்பே இருக்கிறது. இதய நலம் காக்கும், 'ஒலிசிக்' என்ற அமிலம், முந்திரியில் உள்ளது. அதிக அளவு மெக்னீஷியம் சத்து உள்ளதால், ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். எலும்பு தேய்மான பிரச்னையையும் தீர்க்கும். காப்பர் சத்து உள்ளதால், தலை முடி வளர உதவும். மூட்டு வலியையும் தீர்க்கும்.நல்ல கொழுப்பு அதிகம் உள்ளதால், உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கும்.மாதவிடாய் காலத்தில் வலியால் பெண்கள் அவதிப்படுவர். துாக்கம் இன்றி தவிப்பர். முந்திரிப்பருப்பை உண்டு வந்தால், வலி தீரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !