சீத்தாப்பழ பாயாசம்!
தேவையான பொருட்கள்:பெரிய சீத்தாப்பழம் - 1வெல்லம் - 100 கிராம்முந்திரிபருப்பு - 5தேங்காய், தண்ணீர் - தேவையான அளவுநெய், ஏலத்துாள் - சிறிதளவு.செய்முறை: தேங்காயை துருவி பால் எடுக்கவும். சீத்தாப்பழத்தில் கொட்டை நீக்கி, சிறு துண்டுகளாக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில், தண்ணீருடன் சீத்தாப்பழத்தை போட்டு வேக வைக்கவும். வெந்ததும், வெல்லம், தேங்காய்ப்பால் கலக்கவும். வெல்லம் நன்றாக கரையும் வரை தீயை, மிதமாக ஏரியவிடவும். பின், நெய்யில் வறுத்த முந்திரி, ஏலப்பொடியை சேர்க்கவும்.சுவையான நறுமணம் மிக்க, 'சீத்தாபழ பாயாசம்' தயார். அனைவரும் விரும்பி உண்பர். சத்துக்கள் நிறைந்தது. குழந்தைகளுக்கு மாலை நேர உணவாக வழங்கலாம்.- எஸ்.ப்ரியம்வதா, சென்னை.