உள்ளூர் செய்திகள்

பாசிப்பருப்பு உருண்டை!

தேவையான பொருட்கள்:பாசிப்பருப்பு - 100 கிராம்பச்சரிசி - 20 கிராம்வெல்லம் - 100 கிராம்நெய் - 1 தேக்கரண்டிஏலக்காய், தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:பாசிப்பருப்பு, அரிசியை நன்றாக வறுத்து, மாவாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில், வெல்லத்துடன், ஒன்றரை டம்ளர் தண்ணீர் கலந்து, பாகு காய்ச்சி வடிகட்டவும். அதில், மாவைப் போட்டு, நன்றாக கிளறவும். கெட்டி பதம் வந்தவுடன், நெய் விட்டு இறக்கவும். இளம் சூட்டில் சிறிய உருண்டைகளாக பிடிக்கவும். சத்துமிக்க, 'பாசிப்பருப்பு உருண்டை' தயார். சிறுவர், சிறுமியர் விரும்பி உண்பர். உடலை வலுப்படுத்தி பாதுகாக்கும்.- எஸ்.வசந்தி சுரேஷ், விருதுநகர்.தொடர்புக்கு: 99448 07314


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !