சித்வான் தேசிய பூங்கா!
நம் அண்டை நாடான நேபாளத்தில் சித்வான் தேசிய பூங்கா மிகவும் புகழ்பெற்றது. இது, சிவாலிக் மலைத் தொடரில், 93 சதுர கி.மீ., பரப்பளவில் உள்ளது. கண்டகி, ரப்தி ஆறுகளை பெற்றது. உலக பாரம்பரிய இடங்களில் ஒன்றாக யுனெஸ்கா, 1984ல் அங்கீகரித்தது. இந்த பூங்காவின் தெற்கே வால்மிகி தேசிய பூங்கா உள்ளது.பூங்காவில் பைன், சால் மரங்கள், 70 சதவீதம் அளவு உள்ளன; உலகிலே, உயரமான புற்களை இங்கு காணலாம்.ஒற்றை கொம்பு காண்டா மிருகம், வங்காள புலி, கரடி, குரங்கு, யானை, சிறுத்தை பூனை, மீன்பிடி பூனை, செந்நாய், கரியால், நரி என, மிருகங்களை காண முடியும்.ஒற்றை கொம்பு காண்டா மிருகம், 2000 உள்ளன.பூங்காவில், 544 வித பறவைகள் உள்ளன; 67 வகை பட்டாம்பூச்சிகளும் உள்ளன. அபூர்வ வங்காள நரி, சிவப்பு பாண்டா, திபெத்திய ஓநாய் போன்றவற்றையும் பார்க்க முடியும்.- ராஜி ராதா