கொத்துமல்லி!
மத்திய தரைக்கடல் பகுதியை, தாயகமாக கொண்டது கொத்துமல்லி. ஆப்ரிக்கா கண்டம், சூடான், எகிப்து நாடுகளில் இயற்கையாக வளர்கிறது. இந்தியாவில், பஞ்சாப், மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம், மத்தியப்பிரதேசம், ஆந்திரா, தமிழகம் போன்ற மாநிலங்களில் பயிரிடப்படுகிறது.இதில்,'கோரியான்டிரல்' என்ற எண்ணெய் உள்ளது; அதனால், நறுமணம் கமழ்கிறது.கொத்துமல்லி இலைச் சாற்றை, நெற்றியில் பற்றாக போட்டால், தலைவலி குறையும். கொத்துமல்லி விதை, மருந்தாக பயன்படுகிறது; முகப்பருவை கட்டுப்படுத்தும்.உணவு தயாரிப்பில் சுவையூட்டியாக பயன்படுகிறது. மசாலாத்துாள், ஊறுகாய் தயாரிப்பில், விதை முக்கிய இடம் வகிக்கிறது. போதை அடிமைகளை மீட்கவும் உதவுகிறது கொத்துமல்லி.