ஆசிரியரின் தொண்டுள்ளம்!
நான், எஸ்.எஸ்.எல்.சி., படித்த போது நடந்த நிகழ்வு!எங்கள் பள்ளியில் படித்த பலர், வறுமை நிலையில் இருந்தனர். ஒரு நாள், கிழிந்த கால்சட்டை அணிந்து வந்த மாணவன் ஒருவனை, உடற்கல்வி ஆசிரியர் பார்த்து விட்டார்.அன்று மாலை, அவனை அழைத்து, விசாரித்தவர், மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன் என தெரிந்து, அன்றே, அருகில் உள்ள துணிக்கடைக்கு அழைத்து சென்று, இரண்டு செட் சீருடைகள் வாங்கி கொடுத்து, 'இனிமேல் கிழிந்த சீருடை அணியாதே...' என அறிவுரை கூறினார்.அவனுக்கு மிகுந்த சந்தோஷம். ஆசிரியரின் உதவியை, புகழ்ந்து எங்களிடம் சொன்னான். தற்போது என் வயது, 60; அந்த ஆசிரியரின் தொண்டுள்ளம், என் மனதில் உயர்வாய் பதிந்து நிலைத்துள்ளது.- ஆர்.மெர்சி கலாவதி, சென்னை.