உள்ளூர் செய்திகள்

கிராசின்ஸ்!

மத்திய, தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவி லுள்ள ஏரிகள் மற்றும் ஆறுகளில் இந்த கராசின்ஸ் மீன்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இவைகளுக்குள் தென் அமெரிக்காவிலுள்ள பிரன்ஹா மீனும் சேரும். மேலும், தற்போது நாம் மீன் தொட்டிகளில் வைத்துள்ள அழகான வண்ணமுடைய மின்னும் மீன்களையும் இது உள்ளடக்கியுள்ளது. சில கராசின்ஸ் மீன்கள் தாவரங்களையும், மற்றவை சிறிய உயிரினங்களான பூச்சிகள், புழுக்களையும் உண்கிறது. மேலும், சில வகைகள் பெரிய மீன்கள் மற்றும் தவளைகள் போன்றவற்றை வேட்டை யாடி தின்னும் திறனுடையவை. சில வகையான கராசின்ஸ் மீன் இனங்களுக்கு பற்கள் கிடையாது. அவை தண்ணீருக்கு அடியிலுள்ள சிறு சிறு பொருட்கள், இலைகள், கற்கள், அழுக்குகள் போன்றவற்றை <உறிஞ்சி உயிர் வாழ்கிறன்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !