கறிவேப்பிலை ஐ லைக் யு!
கறிவேப்பிலையில் நாட்டுக் கறிவேப்பிலை, காட்டு கறிவேப்பிலை என்று இரண்டு வகைகள் உள்ளன. நாட்டுக் கறிவேப்பிலை உணவிற்கும், காட்டுக் கறிவேப்பிலை மருந்துக்கும் பயன்படுகின்றன. நாட்டுக் கறிவேப்பிலையில் இனிப்பும், துவர்ப்பும், நறுமணமும் ஒருங்கே அமைந்திருக்கும். காட்டுக் கறிவேப்பிலை கசக்கும். கறிவேப்பிலையை தாளிப்பதற்கு பயன்படுத்துவதோடு மட்டுமில்லாமல், சட்னி, துவையல் பொடி போன்றவை தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர்.கறிவேப்பிலை இலையில் வைட்டமின்களும், தாதுப் பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன. முக்கியமாக, 'வைட்டமின் ஏ' அதிக அளவில் உள்ளது.கறிவேப்பிலையை நன்கு அரைத்து, அதனுடன் முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்து தலைக்குத் தேய்த்துக் குளித்தால் முடி நன்றாக வளரும்.கறிவேப்பிலை உடலுக்கு பலம் உண்டாக்கும்; பசியைத் தூண்டும் சக்தி வாய்ந்தது; பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும். அதோடு கறிவேப்பிலை மனதுக்கு உற்சாகத்தையும் கொடுக்க வல்லது. குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியவற்றை கறிவேப்பிலை குணப்படுத்தும். பித்தம் மிகுதியால் உண்டாகும் பைத்தியத்தைக் குணப்படுத்த கறிவேப்பிலை உதவுகிறது.வாந்தி, நாக்கு ருசியற்றுப் போதல், வயிற்றோட்டம், பசியற்ற நிலை, சளி ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். கண்கள் ஒளி பெறவும். முடி நரைக்காமலிருக்கவும், மேனி எழில் பெறவும் கறிவேப்பிலை உதவுகிறது.கறிவேப்பிலைச் சாறு இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை பலப்படுத்துகிறது. பத்திய உணவு சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலைத் துவையலை சேர்த்துக் கொள்வது நல்லது. கண் ஒளி குன்றாமல், நரை திரை இல்லாமல் என்றும் இளமைப் பொலிவுடன் வாழ கறிவேப்பிலை அருமருந்தாக உதவுகிறது.