குட்டீஸ் கார்னர்! - என் பெயர் இருக்கிறதா...
உருது இலக்கியத்தில் புகழ்பெற்று விளங்கிய காலிப், டில்லி சுல்தானுடைய அரண்மனையில் வீற்றிருக்கும் போது, ஏராளமான மாம்பழக் கூடைகள் வந்தன. காலிப்புக்கு மாம்பழத்தின் மீது அதிக ஆசை இருந்தது. வைத்த கண் வாங்காமல் அதை நோக்கினார்.இதைப் பார்த்த சுல்தான், 'என்ன அவ்வளவு கூர்மையாக அவற்றை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறீர்களே?' என்று வினவினார்.'அவற்றில் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறதா என்றுதான் கவனித்துக் கொண்டிருக்கிறேன்' என்றார் காலிப்.உடனே, சுல்தான் அவருடைய வீட்டிற்கு ஒரு கூடை மாம்பழங்களை அனுப்பி வைத்தார்