உள்ளூர் செய்திகள்

குட்டீஸ் கார்னர்

சர்வாதிகாரி ஹிட்லர் ஒருசமயம் மனநல மருத்துவமனை ஒன்றைப் பார்வையிடச் சென்றார்.அப்போது, அங்கிருந்த மனநோயாளிகள் அனைவரும் கோரஸாக, 'வாழ்க ஹிட்லர்!' என்ற முழக்கத்தை எழுப்பினர்.இது ஹிட்லருக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. நாட்டில் மனநிலை பாதிக்கப் பட்டவர்கள் கூடத் தனக்கு உரிய மரியாதை வழங்க வேண்டும் என்பதை உணர்ந்திருந்தது அவரை சந்தோஷத்தின் உச்சிக்கே அழைத்துச் சென்றது. ஆனால், அந்த கூட்டத்தில் ஒரேயொருவர் மட்டும் முழக்கமிடாமல் அமைதியாக இருந்ததைப் பார்த்தார் ஹிட்லர்.உடனே கோபமாக அவரை நோக்கித் திரும்பி, 'நீ மட்டும் ஏன் ஹிட்லர் வாழ்க என கூறவில்லை?' என்று கேட்டார்.அதற்கு அவர் மிகவும் அமைதியாக, 'நான் நோயாளி இல்லை; இந்த மருத்துவமனையின் டாக்டர்' என்று பதிலளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !