குட்டீஸ் கார்னர்!
'ஹென்றி ஸ்மித்' என்பவர் லண்டனைச் சேர்ந்த ஒரு கோடீஸ்வரர். வெள்ளியினால் வேலைப்பாடமைந்த பொருள்களைச் செய்பவர். இவர் பத்து வருடங்கள் ஒரு வினோதமான வாழ்க்கையை மேற்கொண்டார். நாடோடிப் பிச்சைக்காரனைப் போலப் கந்தலுடை உடுத்தி பத்து வருடங்கள் இங்கிலாந்து தேசம் முழுவதும் நடந்தே திரிந்தார். தான் விஜயம் செய்த ஒவ்வொரு நகரத்துக்கும் 5 ஆயிரம் பவுன்கள் நன்கொடை வழங்கினார். ஆனால், ஒரே ஒரு நகரத்துக்கும் மட்டும் இவருடைய நன்கொடையைப் பெறும் பாக்கியம் கிடைக்கவில்லை. இவர் வழங்கிய மொத்த நன்கொடை 2 லட்சத்து 5 ஆயிரம் பவுன்கள்.இந்த வினோத கோடீஸ்வரான ஹென்றி ஸ்மித்தை 'மிட்சம்' என்ற நகரில் போலீசார் கைது செய்தனர். அப்போது இவரிடமிருந்த ஆஸ்தி எல்லாம் ஒரு புதிய சவுக்கு வாங்கத்தான் போதுமானதாக இருந்தது. இந்தப் பணத்தைக் கொண்டு ஒரு புதிய சவுக்கு வாங்கி அதனாலேயே இவருக்கு சவுக்கடி தண்டனை வழங்கப்பட்டது.ஐயோ பாவம்!