குட்டீஸ் கார்னர்!
உலகிலேயே அதிகம் ராணுவ வீரர்கள் கொண்ட நாடு சீனா. இங்கே 25 லட்சம் ராணுவ வீரர்கள் உள்ளனர். இந்தியா மூன்றாவது இடம் வகிக்கிறது. இங்கு 11 லட்சத்து 30 ஆயிரம் வீரர்கள் உள்ளனர்.அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தை சேர்ந்த கிறிஸ்வோக்ட் என்பவருக்கு, தேசிய உருளைக் கிழங்கு கவுன்சில் 'பொட்டேட்டோ மேன்' என்ற பட்டத்தை வழங்கியது. இவர் வெறும் உருளைக் கிழங்கினால் செய்யப்பட்ட உணவு வகைகளை மட்டுமே 60 நாட்கள் சாப்பிட்டார். உருளைக் கிழங்கினால் செய்யப்பட்ட ஐஸ்க்ரீம் என எல்லாமே உருளையினால் ஆனது. கிறிஸ் வோன்ட் மூலம், உருளைக் கிழங்கு தீங்கு செய்யும் உணவு இல்லை என்பதை, நிரூபித்து காட்டவே இப்படி செய்தது.