உள்ளூர் செய்திகள்

குட்டீஸ் கார்னர்!

உயிருள்ள மீன் மற்றும் ஆமை குஞ்சுகள் அடைக்கப்பட்ட 'கீசெயினை' சீனா தயாரித் துள் ளது. சுமார் ஏழு செ.மீ நீளம் கொண்ட காற்று புகாத பிளாஸ்டிக் டப்பாவில் பிரேஸிசிலியன் ஆமை அல்லது சிறிய மீன்கள் அடைக்கப் படுகிறது. இதில் மீன்கள் உயிர் வாழ்வதற்கு தேவையான போசாக்குள்ள தண்ணீர் அடைக்கப்படுவதால், மீன் பலமாதங்கள் உயிரோடு இருக்கும் என்று வியாபாரிகள் உறுதியளிக்கின்றனர். போலந்து நாட்டில் லூப்லின் என்ற நகரத்தை சேர்ந்த ஒரு அன்ன பறவை பார்வையில்லாத நாய் ஒன்றை தனது சிறகுக்கு கீழ் வைத்து பாதுகாப்பாக அழைத்து வந்தது. அன்னப்பறவையின் பெயர் பட்டனஸ். இது சத்தமாக குரல் எழுப்பி நாய்க்கு வழிக்காட்டும். மேலும் நாயின் கழுத்தோடு தன் கழுத்தை வைத்து அரவணைத்து எங்கு சென்றாலும் அழைத்துச் செல்லுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !