உள்ளூர் செய்திகள்

டைனோ என் தோழன்! (17)

முன்கதை: அன்டார்டிகா பனியில் கிடந்த டைனோசர் உடலை வெட்டி, அறிவியல் முறைப்படி, டைனோ குட்டியை உருவாக்கினார் விஞ்ஞானி யோகிபாபு. அதை சிறுவன் சந்திரஜெயனுக்கு பரிசளித்தார். அது இருந்த பகுதியை விண்கல் ஒன்று பயங்கரமாக தாக்கியது. இனி -''விண்கல் அஸ்திரத்தை, இயற்கை ஒரே ஒரு முறை தான் பயன்படுத்தும் என நம்புகிறேன்; இனி, விண்கற்கள் மூலம் டைனோவுக்கு எந்த ஆபத்தும் வராது...'' என்றார் விஞ்ஞானி யோகிபாபு.''ம்ம்...''''மீண்டும் டைனோவை தோட்டத்திற்குள் விடும் முன், இரண்டு விஷயங்களை செய்; ஒன்று, தோட்டத்தை முழுமையாக சுத்தம் செய்; இரண்டு, டைனோவை நன்கு குளிக்க வை...''''மறக்காமல் செய்கிறேன் மாமா...'' ''டைனோவால் தான் விண்கல் உன் வீட்டு அருகே தாக்கியது என்ற உண்மையை யாரிடமும் கூறாதே...''''சரி...''''அவ்வப்போது டைனோவை எனக்கு வீடியோ காலில் காட்டு...''''இப்ப பார்க்கிறீங்களா...''''ரெண்டு நாள் போகட்டும்; நான் சொல்லும் வசனத்தை டைனோவின் காது பட சொல்...''''என்ன வசனம்...''''தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சு; இனி, விண்கல்லால் ஒரு ஆபத்தும் இல்லை; பூமியில் உன் ராஜாங்கம் தான் என கூறு... டைனோ தன்னம்பிக்கை பெறும்...''''நான் சொல்வது புரியுமா...''''பேச மட்டும் தான் முடியாதே தவிர, அது மகா புத்திசாலி...''''நீங்க சொல்ல சொல்ல டைனோவின் மீது அக்கறையும், கரிசனையும் கூடுகிறது; அதன் பாதுகாப்புக்கு நான் பொறுப்பு...''''சமத்து பைய்யன்டா நீ...''''டைனோவை உருவாக்கினது சம்பந்தமா, ஆராய்ச்சி கட்டுரை எதுவும் எழுதலையா...''''எழுதிக்கிட்டுதான் இருக்கேன்; சரியான நேரத்தில், உலக விஞ்ஞானிகள் பார்வைக்கு எடுத்து செல்வேன்...''''நோபல் பரிசு கிடைக்க வாழ்த்துகள் மாமா...''''கிடைத்தால் மகிழ்ச்சி...''எதிர்முனை மரித்தது; அலைபேசியை துயில் ஆழ்த்தினான் சந்திரஜெயன்.அப்போது தலையை நீட்டிய அப்பா, ''டைனோவால் இன்று அனைவரும் பொசுங்கி சாம்பலாக பார்த்தோம்; ஒரு கண்டத்திலிருந்து தப்பி விட்டோம். அடுத்தடுத்த கண்டங்கள் என்ன செய்ய காத்திருக்கின்றனவோ...'' என பதறினார்.மவுனம் காத்தான் சந்திரஜெயன்.ஊரெங்கும் விண்கல் விழுந்தது பற்றிதான் பேச்சு!ஹரிகோட்டாவில் இருந்து வந்த அதிகாரிகள், விண்கல் விழுந்த இடத்திலிருந்து, சாம்பலை சேகரித்து, பரிசோதனைக்கு அனுப்பினர்.புவியியல் நிபுணர்கள், ராட்சச குழியின் நீள, அகல, ஆழத்தை அளந்தனர்.அமெரிக்கா நாசாவிலிருந்தும் விஞ்ஞானிகள் வந்திருந்தனர்; விண்கல் விழுந்த இடத்தை பார்வையிட்டனர்.மாநகராட்சி அதிகாரிகள் தங்களுக்குள் விவாதித்தனர்.'இந்த குழியை மூட என்ன செய்யலாம்...''பழைய கட்டட இடிபாடு கழிவை கொட்டுவோம்...''விசாரணை முடியட்டும்; அதன்பின் மூடலாம்...'டைனோவை குளிப்பாட்டினான் சந்திரஜெயன்; அதன் மூக்கு பகுதியை சுத்தம் செய்தான். விண்கல் விழுந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை; நடுங்கியபடியே இருந்தது.'சந்திரஜெயன்... எங்களோடு கிரிக்கெட் விளையாட வர்றீயா... டைனோவையும் கூட்டிட்டு வா...' என்றனர் தெரு சிறுவர்கள்.மொத்தம், 10 சிறுவர்கள்; இரண்டு அணிகளாக பிரிந்தனர்; பேட்டிங் செய்யும் அணி, பந்தை அடிக்க, டைனோ பந்தை கவ்வி வந்தது.'ஒரு வானவில் நிற பந்தே, இன்னொரு பந்தை கவ்வி வருகிறதே...' என்று கிண்டலடித்தனர்.ஒரு சிறுவன் டைனோவை தொட்டு தடவியபடி, ''வாலை பாரு... அழகா இருக்கு...'' என்றான்.''வால் தான் டைனோ கவிழ்ந்து விடாம பேலன்ஸ் செய்ய உதவுறது...'' என்றான் மற்றொருவன்.சட்டைப் பையிலிருந்து, தேன் மிட்டாய் எடுத்து, டைனோவுக்கு ஊட்டினான் ஒருவன்; அதை ரசித்து தின்றது.இன்னொரு சிறுவன் கல்கோனா மிட்டாயை கொடுத்தான்; ஒவ்வொருவரும் விதவிதமாக தின்பண்டங்கள் கொடுத்தனர்.''பபிள்கம் மட்டும் குடுத்திராதீங்க; தொண்டையில சிக்கிக்கும்...''எச்சரித்தான் சந்திரஜெயன்.'டைனோவை எங்க வீட்டுக்கும் எடுத்துட்டு வாயேன்...' என்றனர் தெரு பெண்கள்.ஒரு வீட்டுக்கு சென்றான் சந்திரஜெயன்.மூன்று வயது குழந்தை, டைனோவை தொட்டு தொட்டு பார்த்து குதுாகலித்தது; அந்த குழந்தை முன் சம்மர் சால்ட் அடித்து காட்டியது டைனோ; வாயின் இருவரிசை பற்களையும், முழுமையாய் காட்டி சிரித்தது.குழந்தை அம்மாவிடமிருந்த லாலிபாப்களை பெற்று, ஒன்றை டைனோவிடம் நீட்டியது.லாலிபாப்பின் மீதிருந்த தாளை உரித்து, டைனோ வாயில் திணித்து, சப்பி சாப்பிடுவது போல காட்டினான் சந்திரஜெயன்.டைனோவும் சப்பியது; அதன் வட்டக்கண்கள் எகாந்தத்தில் செருகின.''அம்மா... இந்த டைனோ பொம்மையை எனக்கு வாங்கிக்கொடு...''அடம்பிடித்து, அழுதான் ஒரு சிறுவன்.- தொடரும்...வஹித்தா நாசர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !