சாந்தோமில் சீடர் !
தருமமிகு சென்னை என்பர். அதற்கு எண்ணற்ற பெருமைகள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் கிறிஸ்துமஸ் காலத்தில் மகிழ் வூட்டும் ஆசியாய் மலரும் இச்செய்தி.உலகிலேயே மூன்று இடங்களில்தான் கிறிஸ்தவ சீடர்களின் கல்லறை மீது ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. ஒன்று, ரோமில் உள்ள புனித ராயப்பர் ஆலயம், இரண்டு ஸ்பெயினில் உள்ள புனித யாகப்பர் ஆலயம், மூன்றாவது சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் சர்ச் என்றழைக்கப்படும் புனித தோமையார் தேசிய திருத்தலம். இந்த தோமையார்தான், 'உயிரோடு எழுந்த ஆண்டவரின் கையில் உள்ள காயத்தில், என் கைகளை வைத்து பார்த்தால்தான் அவர் உயிரோடு எழுந்ததை நம்புவேன்!' என்று சொன்னவர். அதன் பிறகு உயிரோடு எழுந்த ஆண்டவர் மீண்டும் சீடர்கள் ஒளிந்திருந்த இடத்தில் தரிசனமாகி 'தோமையாரே... இங்கே வந்து என்னை தொட்டுப்பார். உன் விரல்களை என் காயங்களில் வைத்துப்பார்... இப்போதாவது என்னை நம்புகிறாயா? நீயாவது என்னை கண்டதால் விசுவசித்தாய்... என்னை காணாமல் விசுவாசிக்கிறவர்கள் பேறுபெற்றோர்...' என்றார். அதன் பிறகுதான் தோமையார் கி.பி.52ல், இந்தியா வந்தார், இங்கிருந்தபடி, பல அற்புதங்களை நிகழ்த்தினார். பின், கி.பி.72ல், அவர் இறந்ததும், அவரது கல்லறை மீது இந்த ஆலயம் எழுப்பப் பட்டது. பின், படிப்படியாக இந்த ஆலயம் நவீனப்படுத்தப்பட்டு, இன்று பேராலயமாக விண்ணைமுட்டும் அளவிற்கு எழுந்துள்ளது. இந்த ஆலயம், அப்போதும், இப்போதும் பல ஆச்சரியங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. சில இடங்கள், இதுவரை கேமராவின் கண்ணில் படாத இடங்களாகும். பாதாளத்தில் உள்ள தோமையாரின் கல்லறை, சுனாமி அலை களின் தடுப்பாக நின்ற பழைய கொடிமரம், பாதாளத்தில் இறங்காமலே சர்ச்சிற்குள் இருந்த படியே கல்லறையில் உள்ள தோமையாரை தரிசிக்கும் கண்ணாடி தரை, பழமை யான கண்ணாடி ஓவியங்களைக் கொண்ட ஜன்னல்கள், எப்போதும் அருள் பாலிக்கும் மேரி, விண்ணு யர்ந்த புதிய கொடிமரம், அருங் காட்சியகம், பார்த்துக்கொண்டே இருப்பது போல் தோன்றும் குழந்தை இயேசுவின் சொரூபம் என்று, எண்ணற்ற விஷயங்கள் இங்கு உள்ளன.இயேசுவின் இடங்கள்: இயேசுவின் புனித பாதம் பட்ட இடங்களுக்குச் சென்று தரிசித்து வருவது இந்திய கிறித்துவ பக்தர்களிடையே நாளுக்கு நாள் அதி கரித்து வருகிறது. அப்படி அவர்கள் செல்லும் இடங்கள் எவை? அங்கு என்ன தரிசிக்கின்றனர் என்பதை சுருக்கமாக பார்ப்போம். ஜோர்டான் நாட்டின் தலை நகரான, அம்மான் நகரம் அங்கிருந்து மவுன்ட் நெபோ சென்று, இயேசுவின் சீடரான மோசேயை புதைத்துள்ள இடத்தை தரிசிக்கின்றனர்.பிறப்பு அறிவித்த இடம்: ஜோர்டான் பள்ளத்தாக்கு வழியாக நாசரேத்திற்கு பக்தர்கள் வருகின்றனர். இறை தூதர் காபிரியேல், 'மேரியின் வயிற்றில் ஆண்டவர் பிறக்க போகிறார்' என அறிவித்த இடம் இது. இதை 'பசிலிக்கா ஆப் அனன்சி யேஷன்' என அழைக்கின்றனர். இந்த நகரத்தில் இயேசுவின் தந்தை ஜோசப் நடத்தி வந்த தச்சு தொழிலகம் உள்ளது. இந்த தொழிலகத்தை இன்று வரை பராமரித்து வருகின்றனர். அருகில் கானா என்ற இடம் உள்ளது. இங்கு இயேசு ஒரு திருமணத்தின் போது ஆறு ஜாடி தண்ணீரை, அமிர்த ரசமாக மாற்றி, அதிசயம் செய்தார்.மலைப்பிரசங்கம்!: இயேசுவின் மலைப் பிரசங்கம் பிரசித்தி பெற்றது. இந்த மலைப்பிரசங்கத்தை முதன் முதலில் மவுன்ட் டபூர் என்ற இடத்தில் தான் துவக்கினார். இந்த இடத்தில் சர்ச் ஆப் பிடிடியூட்ஸ் உள்ளது. இவற்றையெல்லாம் பக்தர் கள் தரிசிக்கின்றனர். இங்கிருந்து மீன் பிடிக்கும் படகில் ஏறி,கலிலேயா வழியாக, செயின்ட் பீட்டரின் வீட்டை சென்று தரிசிக்கின்றனர்.ஞானஸ்நான நதி!: இந்த பகுதியில் ஓடும் ஜோர்டான் நதிக்கு மிகுந்த சிறப்பு உண்டு. ஆம்... இந்த நதியில்தான், இயேசு ஞானஸ்நானம் பெற்றார். மேலும், பல்லாயிரக்கணக்கான மக்கள், இங்கு ஞானஸ் நானம் பெறுகின்றனர். இதனால், பக்தி சுற்றுலா வில் இது முக்கிய இடம் வகிக்கிறது. பக்தர்கள் இதில் குளிப்பதுடன், இந்த நீரை ஊருக்கும் கொண்டு செல்கின்றனர்.சீலோவாம் குளம்!: அடுத்து பயணிக்கும் இடம் எரிகோ. ஒரு பிறவி குருடனின் கண்களில் சேற்றை பூசி, சீலோவாம் குளத்தில் கழுவி வர இயேசு கூற, அவனும் அப்படியே செய்தான். என்ன ஆச்சரியம், கண்பார்வை வந்துவிட்டது. எருசலேம் செல்லும் வழியிலுள்ள எரிகோ என்ற இடத்தில் இளைப்பாறியுள்ளார் இயேசு. சிலுவை!: அடுத்து, டோலோ ரோசா என்ற சோகப் பாதையில் பக்தர்கள் நடக்கின்றனர். இந்த இடத்தில் இயேசு சிலுவையை சுமந்தபடி, 14 இடங்களை கடந்து சென்றார். அவற்றில் ஐந்தில் மட்டுமே தற்போது நடக்க அனுமதி.10 கட்டளைகள்: எகிப்தின் சீனாய் மலைக்குச் சென்று பத்து கட்டளைகளை மோசே பெற்று, உலகிற்கு அறிவித்த இடத்தை தரிசிக்கின்றனர்.அடுத்து மோசேக்கு ஆண்டவர் முட் செடியில் இருந்து தரிசனமானார். அந்த முட்புதரை தரிசிக்கின்றனர். பைபிளில் உள்ள முக்கால்வாசி முக்கிய இடங்களை தரிசித்து, தங்கள் ஆண்டவர் நடந்த, வாழ்ந்த, வரப்போகிற புண்ணிய பூமியை தரிசிப்பதை பெரும் பாக்கியமாகவே கருதுகின்றனர் கிறிஸ்தவர்கள்.ஹேப்பி கிறிஸ்துமஸ்!