உள்ளூர் செய்திகள்

செய்து பாருங்கள்! - கிளிங்... கிளிங்... மணியோசை!

தேவையான பொருட்கள்: 6 சாப்ஸ்டிக்ஸ், 4 வண்ணங்களில் அக்ரிலிக் பெயிண்ட், மீடியம் பெயிண்ட் பிரஷ், பெரிய ஊசி, சிறிய அழகிய கலர் கயிறுகள், பிளாஸ்டிக் க்ளே.செய்முறை:1. படத்தில் காட்டியபடி சாப்ஸ்டிக்ஸ்களில் நான்கு வண்ணங்களில் குறிப்பிட்ட அளவுகளில் வண்ணம் பூசுங்கள். பின்பு, அவற்றை பிளாஸ்டிக் க்ளேயில் காய வைக்கவும்.2. ஒரே அளவிலான 6 கயிறுகளை எடுத்து ஒவ்வொன்றையும் ஒரு சாப் ஸ்டிக்கில் அழகாக கட்டவும்.3. ஒரு பிளாஸ்டிக் மூடியை எடுத்து அதில் பெரிய ஊசியினால் சம இடைவெளியில் ஆறு துளைகள் இட வேண்டும். (வீட்டில் பெரியவர்கள் இதற்கு உதவலாம்)4. சாப் ஸ்டிக்குளின் மேல் கட்டப்பட்ட கயிற்றினை ஒரே அளவில் இந்த துளைகளில் வரிசையாக கட்டவும்!5. பிளாஸ்டிக் மூடியின் நடுவில் ஒரு துளை போடப்பட்டு ஒரு சிறிய கயிறினால் அதை சுவற்றின் பகுதியில் கட்டவும்.இப்போ கிளிங்... கிளிங் மணியோசை உங்க காதுகளை ரெண்டாக்குமே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !