உள்ளூர் செய்திகள்

ஒண்ணுமே செய்யலே!

பழங்கால சீனாவில் சட்டத்தை மீறுபவர்களுக்கு தண்டனை, குற்றம் செய்தவன் கழுத்தில் ஒரு மரச்சட்டத்தை மாட்டி விடுவதுதான். அவன் அதைப் போட்டுக் கொண்டே தன் வேலை களைப் பார்க்க வேண்டும்.ஒரு சீனாக்காரன் தெருவில் போகும்போது, அவனுடைய நண்பன் எதிரில் வந்தான். அவனை பார்த்ததும் அவன் அதிர்ச்சி அடைந்தான்.காரணம். நண்பனின் கழுத்தில் மரச்சட்டம் மாட்டப்பட்டிருந்தது.''என்ன நண்பா என்ன குற்றம் செய்தாய்?'' என்று கேட்டான்.''நான் ஒண்ணுமே செய்யலே?'' என்றான்.''ஒன்றுமே செய்யாததற்கா உனக்கு இந்தத் தண்டனை!'' என்று கேட்டான்.நண்பன், ''தெருவில் ஒரு கயிறு இருந்தது. அதைத்தான் எடுதத்துச்சென்றேன்,'' என்றான்.''கயிறு எடுத்ததற்கா இந்தத் தண்டனை?'' என்று கேட்டான்.நண்பன் ''கயிற்றின் மறுமுனையில் ஒரு பசுவைக் கட்டியிருந்தனர்,'' என்றான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !