உள்ளூர் செய்திகள்

நீரை வீணாக்காதீர்!

கடலுார் மாவட்டம், சிதம்பரம், காமராஜர் மேல்நிலைப் பள்ளியில், 1993ல், 4ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...வகுப்பறையில் அனைவரும் தரையில் தான் அமர்ந்திருப்போம்; ஆசிரியருக்கு மட்டுமே இருக்கை உண்டு; மாத இறுதியில் வகுப்பு தேர்வுகள் நடைபெறும். ஒரு முறை அந்த தேர்வு, பிற்பகலில் நடக்க இருந்தது. அன்று மதிய உணவு இடைவேளையில், ஒரு மாணவனின் குடுவையில் இருந்த தண்ணீர் சிந்தியது. நானும், நண்பர்கள் சிலரும், தேர்வுக்கு சரியாக படிக்காததால், இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி தப்பிக்க ஒரு தந்திரம் செய்தோம். மற்ற மாணவர்களின் குடுவைகளில் இருந்த தண்ணீரையும் வேண்டுமென்றே தரையில் ஊற்றினோம்.வகுப்பறை முழுதும் ஈரமாகியதால், 'தேர்வு நடக்காது' என்று எண்ணினோம். பிற்பகலில் கணித ஆசிரியை முத்துலட்சுமி வந்தார்; பணிப்பெண்ணை அழைத்து, தரையை துடைக்க செய்தார்; சிறிது நேரத்திலேயே நன்றாக காய்ந்துவிட்டது.வகுப்பில் தண்ணீரை சிந்தியதை தெரிந்தும், திட்டாமல், பொறுமையாக, உலகமெங்கும் குடிநீருக்காக மக்கள் படும் இன்னலை கூறி, 'இனி தண்ணீரை வீணடிக்காதீர்...' என அறிவுரைத்தார்.தற்போது, என் வயது, 3௭; அந்த ஆசிரியையின் அறிவுரையை இன்றும் வாழ்க்கையில் கடைப்பிடித்து வருகிறேன்.- லோ.ஆனந்த் ஸ்ரீதர், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !