உள்ளூர் செய்திகள்

டிரை நட் ஸ்வீட்!

தேவையான பொருட்கள்:சிவப்பு அரிசி - 1 கப்தேங்காய் துருவல் - 1 கப்முந்திரி, பிஸ்தா, பேரீச்சம் பழம் - தலா 5உலர் திராட்சை - 25 கிராம்சர்க்கரை - 200 கிராம்நெய் - 100 கிராம்ஏலப்பொடி - சிறிதளவு.செய்முறை:அசிரியை, ஏழு மணி நேரம் ஊற வைக்கவும். அதனுடன், தேங்காய்த் துருவல், முந்திரி, பிஸ்தா சேர்த்து, விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில், இந்த கலவையுடன், சர்க்கரை, நெய் சேர்த்து, மிதமான சூட்டில், அல்வா பதம் வரும் வரை கிளறவும். பதம் வந்ததும், ஏலப்பொடி துாவி இறக்கவும். இதில், நறுக்கிய பேரீச்சை, உலர் திராட்சையை துாவி அலங்கரிக்கவும். சுவையான, 'டிரை நட் ஸ்வீட்' தயார். சத்துமிக்கது. குழந்தைகள் விரும்பி உண்பர்.- எஸ்.சவுந்தரவள்ளி, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !