தூதுவளை தோசை!
தேவையான பொருட்கள்:துாதுவளை இலை - 1 கப்புழுங்கல் அரிசி - 300 கிராம்காய்ந்த மிளகாய் - 3சீரகம் - 1 தேக்கரண்டிசின்ன வெங்காயம் - 10உப்பு, தண்ணீர், எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை:நீரில் நன்கு உறிய அரிசியுடன், துாதுவளை இலை, உப்பு, காய்ந்த மிளகாய், சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து மாவாக்கவும். அதை தோசையாக வார்த்து எடுக்கவும். மொறுமொறுப்பான, 'துாதுவளை தோசை!' தயார். வெல்லம் தொட்டு சாப்பிட ருசி அபாரமாக இருக்கும்; சளி, இருமல், கபம் போக்கும்!- வசந்தா சிவஞானம், சென்னை.