உள்ளூர் செய்திகள்

கத்திரிக்காய் கோஸ் மல்லி!

தேவையான பொருட்கள்:கத்தரிக்காய் - 250 கிராம்வெங்காயம் - 100 கிராம்பச்சை மிளகாய், தக்காளி - தலா 2மிளகாய்த்துாள் - 1 தேக்கரண்டிபெருங்காயம் - சிறிதளவுகடுகு, உப்பு, உளுத்தம் பருப்பு - தேவையான அளவு.செய்முறை: கத்தரிக்காய், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். இவற்றுடன் பெருங்காயம், மிளகாய் துாள், உப்பு போட்டு வேக வைக்கவும். வெந்ததும் நன்றாக கடையவும். இந்த கலவையில், கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து இறக்கவும். சுவையான, 'கத்தரிக்காய் கோஸ் மல்லி' தயார். இட்லிக்கு தொட்டுக் கொள்ள சுவையைக் கூட்டும். அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.- கே.சுலோச்சனா, மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !