உள்ளூர் செய்திகள்

தேர்தல் நிர்வாகம் பயிற்சி!

திருவாரூர் மாவட்டம், தம்பிக்கோட்டை, கீழ்காடு, நடுநிலைப் பள்ளியில், 1989ல், 6ம் வகுப்பு படித்த போது, வகுப்பாசிரியை மாலதி அன்புடன் பழகுவார். பாடம் நடத்தும் போது, இடையே, எழுந்து படிக்க சொல்வர். அப்போது ஒருவித பதட்டம் ஏற்படும்; ஆனால், ஆர்வமாக படிப்பேன். பள்ளி வளாகத்தை சுகாதாரமாக பராமரிக்க, மாணவ, மாணவியருக்கு நுாதனமாக பயிற்சி அளித்தார். பள்ளியில் சுகாதாரம், குடிநீர் பராமரிப்பு என, பணிகளை துறைவாரியாக பிரித்து, நிர்வகிப்பார். இதற்காக, பொது தேர்தல் போல் நடத்தி தேர்வு செய்த மாணவர்களுக்கு அமைச்சர் பதவிகளை உருவாக்கியிருந்தார். பொறுப்புடன் அந்தந்த துறைகளை நிர்வகிக்க கற்றுத்தந்தார். நான் செய்தி துறை அமைச்சரானேன்; அன்றாடம் செய்திதாளில் படிக்கும் முக்கிய தகவல்களை எழுதி வந்து, இறை வணக்க கூட்டத்தின் போது படிப்பது என் பணி. அது, பெரும் பயிற்சியாக அமைந்தது. பின்னர் பல சாதனைகளுக்கு உதவியது. என் ஆர்வத்தை கண்டறிந்ததை எண்ணி வியந்தேன்.என் வயது, 41; படிப்புடன், நிர்வாகத்திலும் பயிற்சி தந்து ஊக்கப்படுத்திய ஆசிரியையை மனதில் கொண்டுள்ளேன். - எம்.மகேஸ்வரி, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !