உள்ளூர் செய்திகள்

தெரிஞ்சுக்கோங்க!

பொதுவாக வீட்டின் சமையலறையில் சமைப்பதற்காக சில அலுமினிய பாத்திரங்களை பயன்படுத்துவோம். அவ்வாறு பயன் படுத்துவதில் மிகவும் கவனம் அவசியம். ஏனென்றால், ஒரு மனிதன் உண்ணும் உணவிலிருந்து அவனுக்கு கிடைக்கும் அலுமினியத்தை விட சமைக்க பயன்படுத்தும் அலுமினிய பாத்திரங்களின் மூலம்தான் அதிகப்படியான அலுமினியம் உடலில் சேருகிறது. இதனால் உடலுக்கு பாதிப்புகள் தான் ஏற்படுகின்றன. அதுவும் நம் தாத்தா, பாட்டிகள்தான் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் குட்டீஸ்!சராசரி மனித உடலில் அலுமினியத்தின் மொத்த அளவு 60 மில்லிகிராம். அதில், மூன்றில் ஒரு பங்கு ஈரலில் காணப்படும். எலும்பிலும் குறிப்பிடத்தக்க அளவு அலுமினியம் இருக்கும். மேலும், நம் உடல் தேவையான அலுமினியத்தை எடுத்து கொண்டு, அதிகமானதை சிறுநீர், மலம் மூலம் வெளியேற்றி விடுகிறது. இப்படி பெருமளவு வெளியே சென்றாலும், 5 சதவீதத்திற்கும் அதிகமானது தசைகளில் படிந்து விடுகிறது. இவ்வாறு படியும் அலுமினியத்தின் அளவு வயதானவர் களிடையே தான் அதிகம் காணப்படுகிறது.மேலும் வயது ஏற ஏற மூளை, சிறுநீரகம், நுரையீரல் என்று ஒவ்வொரு உறுப்புகளிலும் படியும். மூளையில் படியும் போது, அவற்றின் செயல்பாடுகள் பெருமளவு பாதிக்கப்பட்டு, 'அல்சீமர்' போன்ற நோய் ஏற்படும்.இந்நோய் தாக்கும் ஆரம்ப காலங்களில் சிறு சிறு விஷயங்கள் மறந்து போகும். பிறகு, நெருங்கிய உறவினர்களின் பெயர்கள் கூட மறந்து போய்விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !