தெரிஞ்சுக்கோங்க!
கறிவேப்பிலை பற்றி தெரிஞ்சிக்கலாமா குட்டீஸ்...!சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படுவதில் கறிவேப்பிலையும் ஒன்று. இது மலைகளிலும், காடுகளிலும், வீட்டில் தோட்டங்களிலும் பயிராகக் கூடிய ஒரு பெருஞ்செடியின் வகையை சார்ந்தது.கறிவேப்பிலையில் இரண்டு வகை உண்டு. அவை காட்டு கறிவேப்பிலை; நாட்டு கறிவேப்பிலை. காட்டு கறிவேப்பிலை மருந்தாகவும், நாட்டு கறிவேப்பிலை உணவாகவும் பயன் படுகிறது.காட்டு கறிவேப்பிலை பெரிதாக, கசப்பு உள்ளதாக இருக்கும். நாட்டு கறிவேப்பிலை சிறிதாகவும் இனிப்பும், துவர்ப்பும், மணமும் உள்ளதாகவும் இருக்கும்.கறிவேப்பிலையில் தாதுப்பொருள், நார்ச்சத்து, வைட்டமின் போன்றவை அடங்கியுள்ளன. இது ஜீரணத்துக்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும், இளநரையை தடுக்கும். வயிற்று கோளாறுகளால் அவதிப்படுவர்கள் கறிவேப்பிலை பொடியுடன், வெந்தயம் அரைத்து சேர்த்து சாப்பிடலாம்!